2ஜி வழக்கு: டெலிகாம் முன்னாள் செயலர் ஷியாமள் கோஸ் விடுவிப்பு- டெல்லி கோர்ட் அதிரடி!
டெல்லி: கூடுதல் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் இருந்து தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் ஷியாமள் கோஸை டெல்லி சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக விடுவித்துள்ளது. இவ்வழக்கில் இருந்து வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பான பல்வேறு வழக்குகளை சி.பி.ஐ. தொடர்ந்துள்ளது. இவ்வழக்குகள் டெல்லியில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் 2002ஆம் ஆண்டு ஹட்சன், ஸ்டெர்லிங், பார்தி நிறுவனங்களுக்கு கூடுதலாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததால் அரசுக்கு ரூ846.44 கோடி இழப்பு ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கும் அடங்கும்.
2000ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை தொலைத் தொடர்பு செயலராக இருந்த ஷியாமல் கோஸ் மற்றும் 3 நிறுவனங்கள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டன.
இவ்வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. இந்த குற்றப்பத்திரிகையை ஏற்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது குறித்து நீதிபதி ஷைனி முன்னிலையில் இருதரப்பு வாதங்கள் நடைபெற்றன.
இந்த வாதங்கள் முடிவடைந்த நிலையில் ஷியாமள் கோஸ் மற்றும் 3 தொலைத் தொடர்பு நிறுவனங்களை நீதிபதி ஷைனி விடுவித்து உத்தரவிட்டார்.
அப்போது, சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தவறான பொய்யான தகவல்கள் ஜோடிக்கப்பட்டுள்ளன; இத்தகைய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்த அதிகாரி மீது சி.பி.ஐ. இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் அனைத்துமே வலுவானதாக இல்லை. உண்மைக்குப் புறம்பான பல குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே இந்த வழக்கிலிருந்து தொலைத்தொடர்பு துறை முன்னாள் செயலர் சியாமள் கோஷ் விடுவிக்கப்படுகிறார் என்று அதிரடி தீர்ப்பளித்தார் நீதிபதி ஷைனி.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications