கேரளா: ரூ374 கோடி லாவலின் ஊழல் வழக்கில் பினராயி விஜயன் விடுவிப்பு

கேரள மாநிலத்தில் உள்ள நீர்மின் நிலையங்களில் புதுப்பிப்பு, நவீனமயப் பணிகளுக்காக கனடாவை சேர்ந்த எஸ்.என்.சி. லாவலின் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதில் ரூ.374 கோடி அரசு கஜானாவுக்கு இழப்பு ஏற்படுத்தி, ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
இந்த வழக்கில், கேரள முன்னாள் மின்துறை அமைச்சரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயனை குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்க 2009-ம் ஆண்டு கேரள ஆளுநராக இருந்த ஆர்.எஸ். கவாய்க்கு சி.பி.ஐ. கடிதம் எழுதியது. அந்தக் கடிதத்தை அமைச்சரவை பரிசீலனைக்கு ஆளுநர் அனுப்பினார். வி.எஸ். அச்சுதானந்தன் தலைமையிலான அமைச்சரவை பினராயி விஜயனை இந்த வழக்கில் சேர்க்க அனுமதி தர வேண்டாம் என பரிந்துரைத்தது.
ஆனால் அதற்கு மாறாக ஆளுநர் ஆர்.எஸ். கவாய் அனுமதி வழங்கினார். அதன்பின்னர் பினராயி விஜயன் மற்றும் 6 முன்னாள் அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை திருவனந்தபுரம் சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி பினராயி விஜயன், 6 முன்னாள் அரசு அதிகாரிகளும் மனு தாக்கல் செய்தனர்.
இம் மனுவை நீதிபதி ஆர்.ராஜூ விசாரித்து வந்தார். விசாரணை முடிந்து பினராயி விஜயன் மற்றும் 6 முன்னாள் அரசு அதிகாரிகளையும் வழக்கில் இருந்து விடுவித்து அவர் தீர்ப்பு வழங்கினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications