உள்ளாடையை கழற்றி நிர்வாணம் ஆக்குவது பலாத்கார முயற்சி ஆகாது.. ராஜஸ்தான் ஹைகோர்ட் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: சிறுமியின் உள்ளாடையை கழற்றுவதும் நிர்வாணமாக நிற்பதும் பலாத்கார முயற்சி ஆகாது என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி, கடந்த 33 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் சர்ச்சைக்குரிய வகையில் இந்த தீர்ப்பை அளித்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:-

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டோங்க் மாவட்டத்தை சேர்ந்தவர் கோபி என்பவரது மகன் சுவலால். கடந்த 1991 ஆம் ஆண்டு சுவலால் (அப்போது வயது 26) தனது பகுதியில் வாட்டர் பூத் ஒன்றில் தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்த ஆறு வயது சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தூக்கி சென்றுள்ளார்.

Court Rajasthan weird Trend

மேலும் சிறுமியின் ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்தியுள்ளார். அப்போது அச்சத்தில் சிறுமி கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதையடுத்து சிறுமியை தூக்கி சென்று அத்துமீறலில் ஈடுபட முயன்ற சுவலால் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினார். சிறுமியின் தாத்தா அளித்த புகாரின் பேரில் சுலாவல் மீது வழக்குப்பதிவு செய்யபப்பட்டது.

சுலாவால் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக டோங்க் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மாவட்ட நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சுலாவல் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். 33 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் சமீபத்தில் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், சிறுமியின் உள்ளாடைகளை கழற்றி நிர்வாணப்படுத்துவது பாலியல் பலாத்கார முயற்சி கிடையாது.

பெண்களின் கண்ணியத்தை சீர்குலைக்கும் குற்றம் ஆகும். எனவே சட்டப்பிரிவு 376 மற்றும் 511 பிரிவுகளின் கீழ் இந்த குற்றச்சாட்டு வராது. பாலியல் பலாத்கார முயற்சி என்றால் அதையும் தாண்டி செய்து இருக்க வேண்டும். அப்படியான எதுவும் இல்லை என்பதால் ஐபிசி 354 என்ற அடிப்படையில் பெண்ணின் கண்ணியத்தை பாதித்தல் என்ற அடிப்படையில் தான் தண்டனை வழங்க முடியும். எனவே குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது பாலியல் பலாத்கார முயற்சி வழக்குகளை ரத்து செய்து விட்டு மானபங்கப்படுத்துதல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+