ரிப்பளிக் டிவி ஜன் கி பாத் கருத்துக்கணிப்பு.. கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு!
ரிப்பளிக் டிவியின் ஜன் கி பாத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
Recommended Video

பெங்களூரு: ரிப்பளிக் டிவியின் ஜன் கி பாத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்றது. மொத்தம் 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தில் 2 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜெயநகர் தொகுதி பாஜ வேட்பாளர் விஜயகுமார் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் மற்றும் ஆர்.ஆர்.நகரில் வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்ததாலும் இந்த 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை.
வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் தொலைக்காட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளன. அதன்படி ரிப்பளிக் டிவியின் ஜன் கி பாத் - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு 95 முதல் 114 தொகுதிகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 73-82 இடங்கள் தொகுதிகளில் வெற்றி பெறும்.
மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 32 - 43 தொகுதிகள் கிடைக்கும். மற்றவர்கள் 2 முதல் 3 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications