ஒன்றிற்கு 3 எக்ஸிட் போலை வெளியிட்ட ரிபப்ளிக் டிவி... வெற்றிக் கனி தாமரைக்குத் தான் என கணிப்பு!
குஜராத் தேர்தல் குறித்து ஒன்றிற்கு 3 எக்ஸிட் போல் முடிவுகளை ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ளது. அனைத்து முடிவுகளுமே பாஜக 104 முதல் 115 இடங்கள் வரை வெற்றி பெரும் என்று கூறியுள்ளன.
Recommended Video

மும்பை: குஜராத் சட்டசபையில் எந்த கட்சி வெல்லப்போகிறது என்று 3 எக்ஸிட் போல் முடிவுகளை ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ளது. 3 கருத்துக்கணிப்புகளுமே பாஜகவின் வெற்றி வாய்ப்பை உறுதிபடுத்துகின்றன.
குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கான அங்கீகரமாக பார்க்கப்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநில மக்கள் பாஜகவின் அதிரடி பொருளாதார மாற்றங்களான ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு விவகாரங்களை எப்படி பார்க்கின்றனர் என்ற எதிர்பார்ப்பே குஜராத் தேர்தல் முடிவுகளை அனைவரையும் பார்க்க வைத்துள்ளது.
குஜராத் சட்டசபை தொகுதிகளுக்கான இரண்டு கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில் ரிபப்ளிக் டிவி 3 கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு அது குறித்து ஆய்வு செய்து வருகிறது. 2012 சட்டசபை தேர்தலில் பாஜக 115 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும் இதர கட்சிகள் 6 இடங்களிலும் வென்றது.

பாஜகவிற்கே வெற்றி
இந்நிலையில் சி வோட்டர் கருத்துக்கணிப்பில் பாஜக 108 இடங்களில் வெல்லும் என்றும், காங்கிரஸ் கட்சி 74 இடங்களில் வெல்லும் என்றும் கூறியுள்ளது. இதே போன்று ரிபப்ளிக் டிவியின் தொலைக்காட்சி பார்ட்னரான நிர்மான டிவி பாஜக 104 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 74 இடங்களிலும் இதர கட்சியினர் 4 இடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என்று முடிவுகளை வெளியிட்டுள்ளது.

3 கருத்துக்கணிப்பு முடிவுகள்
இதே போன்று ஜன் கி பாத் என்ற மற்றொரு கருத்துக்கணிப்பு முடிவில் 115 இடங்களை பாஜக கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் கட்சி 65 இடங்களை கைப்பற்றும் என்றும் இதர கட்சிகள் 2 இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த 3 கருத்துக்கணிப்பின் ஒட்டுமொத்த சதவீத அடிப்படையில் எக்ஸிட் போல் முடிவாக பாஜக மொத்தம் 109 இடங்களை கைப்பற்றும் என்று ரிபப்ளிக் டிவி முடிவு வெளியிட்டுள்ளது.

பாஜக ஆட்சியை தக்கவைக்கும்
காங்கிரஸ் கட்சி 71 இடங்களையும், இதர கட்சிகள் 2 இடங்களில் வெற்றி பெறும் என்றும் ரிபப்ளிக் டிவியின் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 3 கருத்துக்கணிப்பு முடிவுகளுமே பாஜக ஆட்சி அமைக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

காங்கிரஸ்க்கு 10 இடங்களில் அதிக வெற்றி
இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைத்துமே குஜராத்தில் 22 ஆண்டு ஆட்சியை பாஜக இந்த முறையும் தக்க வைத்துள்ளதாக கூறுகின்றன. எனினும் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு அதிகரித்துள்ளதன் எதிரொலியாகவே 10 இடங்களில் கூடுதல் வெற்றியை காங்கிரஸ் பெற்றுள்ளதாக தற்போதைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிக்காட்டுகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications