வரும் செப்டம்பர் முதல் ரூ.200 நோட்டுகள் புழக்கத்துக்கும் வரும் ... ரிசர்வ் வங்கி தகவல்
வரும் செப்டம்பர் மாதம் முதல் ரூ.200 நோட்டுகளை அறிமுகம் செய்யவுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் அளித்துள்ளது.
டெல்லி: புதிய ரூ.200 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதால் ஆகஸ்ட் இறுதி வாரத்திலோ அல்லது செப்டம்பர் முதல் வாரத்திலோ புழக்கத்துக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் இறுதியில் ரூ 500, 1000 நோட்டுகளை ஒழிப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு பதில் புதிய ரூ 500 மற்றும் 2000 நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்துக்கு விடப்பட்டன. இதன் மூலம் மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகினர்.

2000 ரூபாய் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதை அடுத்து தற்போது 200 ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவுசெய்துள்ளது. பரிவர்த்தனைகளை எளிதாக்கும் நோக்கில், 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் கடந்த மாதம் தெரிவித்தது.
இதனையடுத்து கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளத்தில், 200 ரூபாய் நோட்டுகள் ஜூலை மாதம் முதல் அச்சிடப்பட்டுவிட்டது. இந்நிலையில் இந்த புதிய ரூபாய் நோட்டுகள் ஆகஸ்ட் இறுதி வாரத்திலோ அல்லது செப்டம்பர் முதல் வாரத்திலோ புழக்கத்துக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த புதிய ரூபாய் நோட்டுக்கள் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கலந்த வண்ணத்தில் இருக்கும் என்று தெரிகிறது. ரூ.100-க்கும் ரூ.500-க்கும் இடையில் எந்த நோட்டுகளும் இல்லாததால் ரூ. 200-ஐ அச்சிட முடிவு செய்த மத்திய அரசு தற்போது புழக்கத்தில் விட தயாராகிவிட்டது.
-
ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்! -
இந்திய ரூபாய் நோட்டுகள் மொத்தமாக மாறப்போகுது! ரிசர்வ் வங்கியின் அதிரடி திட்டம்! இனி கிழியவே கிழியாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications