இது ராதே மாவா, பப்பி லாஹிரியா?: நடிகர் ரிஷி கபூர் கிண்டல்
மும்பை: சர்ச்சையில் சிக்கியுள்ள பெண் சாமியார் ராதே மாவை பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் கிண்டல் செய்துள்ளார்.
பக்தர்கள் முன்பு அடக்க ஒடுக்கமாக இருக்கும் பெண் சாமியார் ராதே மா மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சமூக வலைதளங்களில் பலரும் ராதே மாவை கிண்டல் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் ரிஷி கபூரும் ட்விட்டரில் ராதே மாவை கிண்டல் செய்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
Make up,lipstick,eye shadow,jewellery et al. for discourses? Is that my friend Bappi Lahiri without his glasses? pic.twitter.com/jSaa8GML9F
— rishi kapoor (@chintskap) August 7, 2015 மேக்கப், லிப்ஸ்டிக், ஐ ஷேடோ, நகைகள் மற்றும்...இது கண்ணாடி போடாமல் உள்ள என் நண்பர் பப்பி லாஹிரியா என்று கேட்டுள்ளார் ரிஷி.
பிரபல இசையமைப்பாளர் பப்பி லாஹிரி எப்பொழுதும் நிறைய நகைகள் அணிந்து, பத்து லேயர் மேக்கப்புடன் இருப்பார். அவரை வைத்து தான் ராதே மாவை கிண்டல் செய்துள்ளார் ரிஷி.












Click it and Unblock the Notifications