ஹேமமாலினி விளம்பரத்துக்கு தடை விதிக்க வேண்டும்: அஜித் சிங் கட்சியினர் புகார்
மதுரா: பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ஹேமமாலினியின் டிவி விளம்பரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் புகார் தெரிவித்துள்ளது.
பாலிவுட் நடிகையும் பாஜக ராஜ்யசபா உறுப்பினருமான ஹேம மாலினி, உ.பி. மாநிலம் மதுரா தொகுதியில் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் ராஷ்டிரிய லோக்தளத் தின் சார்பில் கட்சித் தலைவர் அஜித் சிங்கின் மகன் ஜெயந்த் சௌத்ரி களமிறக்கப்பட்டுள்ளார்.
இவர், ஹேமமாலினிக்கு எதிராக மதுரா தேர்தல் அதிகாரியிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்துள்ளார்.

அதில் ‘வாட்டர் பில்டர்' நிறுவனத்துக்காக ஹேமமாலினி மாடலாக நடித்துள்ள விளம்பரப் படம் டிவி சேனல்களில் வெளியாகி வருகிறது. பத்திரிகைகளிலும் நாள்தோறும் இந்த விளம்பரங்கள் வெளியாகின்றன. இது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாகும். இதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விளம்பர செலவுகள் வேட்பாளரின் செலவுத் தொகையின் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் எனவும் அஜீத்சிங் கட்சியின கூறியுள்ளனர்.
இந்த குறிப்பிட்ட விளம்பரப்படம் புதியது அல்ல. பல வருடங்களாக வெளியாகி வருகிறது. அப்படி யானால் ஹேமாஜி நடித்த இந்திப் படங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் எனக் கேட்பார்கள் போலுள்ளது' என்று கூறி சிரிக்கின்றனர், மதுராவில் உள்ள பாஜகவினர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications