ஐ லவ் யூ டா செல்லம்: கட்டுப்பாட்டு அறைக்கு போன் போட்டு ஆண் போலீசாரை கலாய்க்கும் பெண்கள்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து ஆண் காவலர்களை பெண்கள் கலாய்க்கும் கொடுமை நடந்து வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வரும் ஆண் காவலர்கள் ஒரு வகையான அச்சத்துடனேயே உள்ளனர். காரணம் பெண்கள். ஆம், பல பெண்கள் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து நான் உன்னை காதலிக்கிறேன், என்னுடன் தயவு செய்து பேசுங்கள் என்கிறார்கள். சிலர் காவலர்களிடம் அசிங்கமாக பேசுகிறார்கள்.

இந்த சேட்டை ராணிகளால் உதவி தேவைப்படுவோரால் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள முடியாமல் உள்ளது.
இது குறித்து கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் கான்ஸ்டபிள் சஞ்சீவ் மாலிக் கூறுகையில்,
தினமும் 100 போன் அழைப்புகள் வருகிறது. அதில் 90 போன் அழைப்புகள் சேட்டைக்காரர்கள் செய்வது. சில எண்கள் எங்களுக்கு மனப்பாடமாக தெரிந்திருப்பதால் அந்த அழைப்புகளை கண்டுகொள்வது இல்லை. பெண்கள் தினமும் போன் செய்து கலாய்க்கிறார்கள்.
சிலர் காதலை தெரிவிக்கிறார்கள், சிலர் அசிங்கமாக பேசுகிறார்கள். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் பல முறை கூறியும் பலன் இல்லை என்றார்.
மற்றொரு கான்ஸ்டபிளான பிரதீப் குமார் கூறுகையில்,
பெண்கள் போன் செய்து தொல்லை கொடுக்கிறார்கள். சில நேரம் ஆண்களும் போன் செய்து அசிங்கமாக பேசுவார்கள். சில சமயம் பெற்றோர் போன் செய்து தங்களின் குழந்தைகளின் கையில் போனை கொடுத்துவிடுவார்கள் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications