பாலியல் புகார்: எப்.ஐ.ஆரில் டெஹல்கா நிறுவனர் பெயருடன் பிரபல ஹாலிவுட் ஹீரோவின் பெயர்
பனாஜி: டெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பால் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முதல் தகவல் அறிக்கையில் ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோவின் பெயரும் உள்ளது.
டெஹல்கா பத்திரிக்கை
கோவாவில் கடந்த வாரம் திங்க்பெஸ்ட் என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு தான் டெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பால் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அந்த பத்திரிக்கையில் பணியாற்றிய பெண் ஊழியை ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
நான், தருண் தேஜ்பால் மற்றும் ராபர்ட் டி நீரோ ஆகியோர் லிப்ட்டில் சென்றோம். அப்போது லிப்ட் எங்கும் நிற்காமல் இருக்க தேஜ்பால் லிப்ட்டின் பட்டனை அழுத்திக் கொண்டே இருந்தார். இரண்டாம் தளத்தில் லிப்ட்டின் கதவு திறந்ததும் நீரோ சென்றுவிட்டார். அப்பொழுது ஏதோ நடக்கப் போகிறது என்று நினைத்து நான் மாடிப்படியில் வருகிறேன் என்று தேஜ்பாலிடம் கூறினேன். ஆனால் அவர் என்னைப் பிடித்து இழுத்தார் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications