செய்தியாளரின் மைக்கைத் தட்டி விட்டு "பைத்தியக்காரத்தனமாக" நடந்து கொண்ட ராபர்ட் வதேரா!
டெல்லி: ஹரியானாவில் நடந்த சர்ச்சைக்குரிய வகையில் நிலங்களை வாங்கிய விவகாரம் குறித்து கேள்வி கேட்ட செய்தியாளர் மீது கோபத்தைக் காட்டிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், தொழிலதிபருமான ராபர்ட் வதேரா, செய்தியாளரின் மைக்கைத் தட்டி விட்டும், உனக்கு என்ன பைத்தியமா என்றும் கோபத்துடன் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹரியானா மாநிலத்தில் வதேரா பல்வேறு நிலங்களை வாங்கியதில் பெருமளவில் அதிகாரதுஷ்பிரோகம் நடந்துள்ளதாக பாஜக குற்றம் சாட்டி வந்தது. தற்போது பாஜக ஹரியானால் ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல் வேலையாக வதேரா சம்பந்தப்பட்ட நில பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்கப்படும் என்று ஹரியானா அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் டெல்லி அசோகா ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சிக்கு வதேரா வந்திருந்தார். அப்போது அவரிடம் ஏஎன்ஐ செய்தியாளர் இந்த விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பினார். அதைக் கேட்டு கோபமடைந்த வதேரா, செய்தியாளரைப் பார்த்து, 'ஆர் யூ சீரியஸ்' என்று திருப்பித் திருப்பி சில முறை, (நடிகர் ரகுவரன் ஒரு படத்தில் ஐ நோ.. ஐ நோ என்று சொல்வதைப் போல) கேட்டார். பின்னர் மைக்கைத் தட்டி விட்டு விட்டுப் போனார்.
போனவர் மீண்டும் செய்தியாளரை நோக்கி அடிக்க வருவதைப் போல வந்தார். நீ என்ன பைத்தியமா என்றும் கத்தியபடி கேட்டார். அவரை பாதுகாவலர்கள் தடுத்து அமைதிப்படுத்தி அழைத்துச் சென்றனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications