திருமலை மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறை...அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் பக்தர்கள்!
திருமலை செல்லும் மலைப்பாதையில் பாறை உருண்டு விழுந்து விபத்து ஏற்பட்டதில் அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் உயிர்தப்பினர்.
திருப்பதி : திருப்பதியிலிருந்து திருமலை செல்லும் மலைப்பாதையில் திடீரென பாறை உருண்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதியில், கீழ்திருப்பதி எனப்படும் அலிபிரியில் இருந்து மேல்திருப்பதி எனப்படும் ஏழுமலையான் குடிகொண்டுள்ள திருமலைக்கு இடையே, 2 மலைப்பாதைகள் உள்ளன. கீழிருந்து மலைக்கு வாகனங்கள் செல்வதற்கு முதல் மலைப்பாதையும், மேலிருந்து கீழே இறங்கி வருவதற்கு 2-வது மலைப்பாதையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

திருப்பதி, திருமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மலைப்பாதையில் மண் சரிந்து விழும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் இன்று கீழ்திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் பாதையில் பாறை ஒன்று உருண்டு விழுந்தது. ஒரு பாறை இரண்டாக உடைந்து விழுந்த நிலையில் மற்றொரு பாறை தடுப்பு வேலி அருகே உருண்ட சென்று விழுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருமலை- திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக வாகனங்கள் எதுவும் அந்தப் பாதையில் செல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டத.
கிரேன் மூலம் பாறைகள் அகற்றப்பட்டதால் சிறிது நேரத்தில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. எனினும் ஒரு பாறை பலமாக சாலையில் விழுந்தததில் பலத்த சேதமடைந்ததால் சாலையை செப்பனிடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications