ஹரியானா ஜிர்கா தேர்தல்.. காங்கிரஸ் வெற்றிக்கு காரணமாக மாறிய ரோஹிங்கியா முஸ்லீம்கள்?
குருகிராம்: ஹரியானா மாநிலம் நுஹ்வில் உள்ள ஜிர்கா சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மம்மன் கான் 98,441 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, கான் மொத்தம் 1,30,497 வாக்குகளைப் பெற்றுள்ளார். இருப்பினும், கானின் வெற்றி பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி உள்ளது.
ஜூலை 31, 2023 அன்று நூஹில் நடந்த வகுப்புவாத வன்முறைக்கு இவர் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறார். அங்கே கலவரத்தை தூண்டியதாக தற்போது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் விசாரணைக்கு உள்ளாகி உள்ளார்.

கானின் வெற்றிக்கு உள்ளூர் முஸ்லீம் சமூகத்தின் வலுவான ஆதரவே காரணம் என்று கூறப்பட்டாலும், அப்பகுதியில் வசிக்கும் சட்டவிரோத ரோஹிங்கியா முஸ்லீம்கள் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறார்கள்.
ஹரியானாவில் நுஹ் மாவட்டம் குறிப்பிடத்தக்க முஸ்லீம் மக்கள்தொகையைக் கொண்ட மாவட்டம் ஆகும், அங்கே உள்ள மக்கள் தொகையில் சுமார் 80% முஸ்லீம் மக்கள்தொகையினர் ஆவர். சட்டவிரோத ரோஹிங்கியா குடியேற்றம் காரணமாக இந்த முஸ்லீம் மக்கள்தொகை அதிகரித்தபடியே இருக்கிறது. நூவில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து, வகுப்புவாத கலவரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பல ரோஹிங்கியா அகதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆனால் இந்த விவகாரத்தில் இன்னும் பல மோசமான சதிகள் வெளிவர தொடங்கி உள்ளன. அக்டோபர் 7 அன்று, ஆர்கனைசர் வீக்லி என்ற ஊடகம் இது தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டது. சட்டவிரோத ரோஹிங்கியா குடியேறிகளுக்கு உதவுவதாகக் கூறப்படும் நூஹிலில் உள்ள மதராஸாவைக் காட்டும் வீடியோவை செய்தியாக வெளியிட்டது.
அந்த வீடியோவில், அங்குள்ள மதராஸாவில் கலந்து கொள்ளும் இளம் சிறுவர்கள், "நம் மார்க்கத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் நரகத்தில் எரிவார்கள்" என்று கூறுவது கேட்கப்படுகிறது. இப்பகுதியில் சுமார் 400 சட்டவிரோத குடியேற்றவாசிகள் வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில்தான் வகுப்புவாத கலவரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பல ரோஹிங்கியா அகதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த மதராசாவில் உள்ள ஆசிரியர்கள் தாங்கள் மியான்மரை (பர்மா) சேர்ந்தவர்கள் என்றும், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர் தாங்கள் நூஹில் எந்தப் பிரச்சனையும் சந்திக்கவில்லை என்றும் இங்கு நல்ல வசதியான விருந்தினர்கள் வாழ்கிறோம் என்றும் பெருமிதத்துடன் கூறினார்கள். பல ஊடக நிறுவனங்களின் பத்திரிக்கையாளர்களிடம் கேமராவில் பேசுகையில், அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உருது, பாஷ்டோ, பார்சி, ஆங்கிலம் மற்றும் இந்தி கற்பிப்பதாக பெருமையாக கூறி உள்ளனர்..
இங்கே வந்து குடியேறி உள்ள ரோஹிங்கியா அகதிகளின் குழந்தைகள், "ஹாஃபிஸ்" ஆக வேண்டும் என்று கூறி உள்ளனர். நாங்கள் டாக்டர்கள் அல்லது பொறியாளர்கள் ஆவதை விட , "ஹாஃபிஸ்" ஆக வேண்டும் என்பதே எங்கள் லட்சியம். நாங்கள் குர்ஆனை மனப்பாடம் செய்து உள்ளோம் என்று செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
மியான்மரில் நடந்த வன்முறையில் இருந்து தப்பிக்க 2016-ம் ஆண்டு வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக ரோஹிங்கியா அகதி ஒருவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு உள்ளார். தன்னிடம் பாஸ்போர்ட் அல்லது விசா இல்லை என்பதையும், "சில" வசதியாளர்களின் உதவியுடன் எல்லையைத் தாண்டியதையும் அவர் ஒப்புக்கொண்டு உள்ளார்.
தன்னிடம் இருக்கும் ஆவணத்தின் ஒரே வடிவம் UNHCR அகதிகள் அட்டை என்றும், இந்தியா வழங்கிய அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும் கூறி உள்ளார். அங்கே ஏற்கனவே கலவரங்கள் ஏற்படுகின்றன.. மக்கள் தொகை பெருக்கமும் அதிகரித்துள்ளது.. வகுப்புவாத பதட்டங்கள் உச்சம் அடைந்து உள்ளன.. இப்படிப்பட்ட நேரத்தில் முறையான ஆவணங்கள் இல்லாத இது போன்ற ரோஹிங்கியா அகதிகள் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
மத மோதல், இந்தியா பாதுகாப்பிற்கு சிக்கல் என்பதை தாண்டி.. காங்கிரஸ் கட்சிக்கும் பல கடினமான கேள்விகளை இந்த விஷயம் எழுப்பி உள்ளது. வேறு நாட்டில் இருந்து குடியேறும் இது போன்ற வெளியாட்களை காங்கிரஸ் வேண்டுமென்றே ஆதரிக்கிறதா? ரோஹிங்கியாக்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களுக்கு காங்கிரஸ் ஏன் துணை நிற்கிறது? காங்கிரஸ் கட்சி ரோஹிங்கியாக்களை வாக்கு வங்கியாக பயன்படுத்துகிறதா? தனது தேர்தல் வெற்றியில் ரோஹிங்கியாக்களின் பங்கை காங்கிரஸ் தெளிவுபடுத்துமா? என்ற பல கேள்விகள் எழுந்த்துள்ளது.
காங்கிரஸின் மறைமுக ஆதரவுடன் எவ்வளவு காலம் இந்த அடாவடி நாடகம் தொடரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்












Click it and Unblock the Notifications