ஓடும் பஸ்ஸில் கிண்டல் செய்த வாலிபரை பெல்ட்டால் விளாசிய சகோதரிகள்
ரோதக்: ஹரியானாவில் பேருந்தில் சில்மிஷம் செய்த வாலிபரை சகோதரிகள் இருவர் சேர்ந்து அடித்து நொறுக்கியுள்ளனர்.
ஹரியானா மாநிலம் ரோதக்கைச் சேர்ந்தவர்கள் சகோதரிகளான ஆர்த்தி மற்றும் பூஜா. அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கல்லூரி முடிந்து வீடு செல்ல பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது வாலிபர் ஒருவர் அவர்களை கிண்டல் செய்துள்ளார். அதை அவர்கள் எதிர்த்ததும் அந்த நபர் தனது நண்பர்கள் இருவரை அழைக்க அவர்கள் வந்து சகோதரிகளை பார்த்து அசிங்கமாக செய்கை செய்தும், தகாத வார்த்தைகளால் திட்டியும் உள்ளனர்.
{ventuno}
சகோதரிகளில் ஒருவர் அதை தட்டிக் கேட்க அந்த வாலிபர் அவரின் கழுத்தை பிடித்துவிட்டார். இதை பார்த்த மற்றொரு சகோதரி கோபம் அடைந்து தனது பெல்ட்டை கழற்றி அந்த வாலிபரை அடித்து நொறுக்கினார். அவரும் சகோதரிகளை பதிலுக்கு அடித்தாலும் அவர்கள் விடாமல் அந்த நபரை தாக்கினர். பின்னர் அந்த வாலிபர்கள் சகோதரிகளை பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். அவர்களும் கீழே இறங்கி ஆர்த்தி மற்றும் பூஜாவை அடித்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இத்தனை நடந்தும் பேருந்தில் இருந்தவர்கள் எதுவும் செய்யாமல் வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர். இந்த சம்பவத்தை பேருந்தில் இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து சகோதரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் அடிவாங்கிய வாலிபர் விரைவில் போலீஸாகப் போவதால் புகாரை திரும்பப் பெறுமாறு அவரது கிராமத்தார் சகோதரிகளை கேட்டுக் கொண்டனர். வாலிபர்கள் ஆர்த்தி, பூஜாவிடம் மன்னிப்பு கேட்பார்கள் என்று பஞ்சாயத்தார் தெரிவித்தனர்.
ஆனால் அடி வாங்கிய வாலிபர் உள்பட 3 பேரும் நாங்கள் தற்கொலை செய்வோமே தவிர அந்த பெண்களிடம் மன்னிப்பு கேட்க மாட்டோம் என்று தெரிவித்துவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications