பூ ஒன்று புயலாக மாறியது... சர்..சர்... டுர்..டுர்... பைக் ஆம்புலன்ஸ் ஓட்டி அசத்திய ரோஜா..!

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திர மாநிலம் நகரியில் பைக் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த ரோஜா எம்.எல்.ஏ. திடீரென அதனை ஓட்டி அங்கிருந்தவர்களை வியக்க வைத்தார்.

Recommended Video

    Bike Ambulance ஓட்டி கலக்கும் Roja MLA | Oneindia Tamil

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருக்கும் ரோஜா அவ்வப்போது சில அதிரடிகளை நிகழ்த்தி ஊடக வெளிச்சத்திற்கு வருவார். கொரோனா ஊரடங்கு காலத்தில் நிகழ்ச்சிகள் நடத்தியது, தன்னை பூ தூவி கிராமமக்களை வரவேற்க வைத்தது, ஆம்புலன்ஸ் ஓட்டுவதற்குரிய உரிமம் இல்லாமல் அதனை இயக்கியது என அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம்.

     Roja mla Drived Bike ambulance in Nagari

    தனது நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். கேண்டீன் திறந்து 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தின் மூலம் ஆந்திர மக்களின் கவனத்தை ஈர்த்த ரோஜா, கடந்த 2019-ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு அமைந்த போது தனக்கு துணை முதல்வர் பதவி அல்லது அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், ரோஜாவின் தடாலடி நடவடிக்கைகள் காரணமாக அவருக்கு அந்தப் பதவிகளை கொடுக்காத ஜெகன், ஆந்திர தொழில் உள்கட்டமைப்பு கழகத் தலைவர் என்ற பொறுப்பை வழங்கினார்.

    இந்நிலையில் நகரி அரசு மருத்துவமனைக்கு தனியார் தொழில் நிறுவனம் சார்பில் இரண்டு பைக் ஆம்புலன்ஸ் அண்மையில் வாங்கித் தரப்பட்டது. அதற்கான தொடக்க விழாவில் கலந்துகொண்டு, பைக் ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்த ரோஜா எம்.எல்.ஏ. திடீரென அந்த பைக்கை தாமே ஓட்டினார். கியருடன் கூடிய இரு சக்கர வாகனத்தை அவர் இயக்கிய புகைப்படம் ஆந்திரா முழுவதும் வைரலானது.

     Roja mla Drived Bike ambulance in Nagari

    அரசியல் கட்சிகளிடம் பல லகரங்களை பெற்றுக்கொண்டு பிராண்டிங் செய்வதற்கான பணிகளை கவனிக்க பல நிறுவனங்கள் உள்ள நிலையில், ஒரு ரூபாய் கூட செலவின்றி தன்னையும் தனது இமேஜையும் வெகுஜன மக்களிடையே கொண்டு சேர்க்கும் கைங்கர்யத்தை கற்று வைத்திருக்கிறார் ரோஜா எம்.எல்.ஏ.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+