சபரிமலை: விடுதி அறை வாடகை 4 மடங்கு உயர்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி
சபரிமலை: சபரிமலை தங்கும் விடுதிகளின் அறை வாடகை நான்கு மடங்காக உயர்த்தப் பட்டுள்ளதால், அங்கு செல்லும் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்.
கார்த்திகை மாதம் ஆரம்பித்து விட்டாலே சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு, விரதம் இருந்து சபரிமலை தரிசனத்துக்கு கிளம்பி விடுவார்கள் பக்தர்கள். அந்த வகையில் இந்தாண்டு, சபரிமலைப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு அங்குள்ள விடுதிகளின் கட்டண உயர்வு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

அதிரடி உயர்வு...
சபரிமலையில் உள்ள தங்கும் விடுதிகளில் சில பக்தர்கள் நன்கொடையாகக் கட்டிக் கொடுத்தவையே. சமீபத்தில் புதுப்பிக்கப் பட்ட இந்த விடுதிகளின் அறை வாடகையை அதிரடியாக உயர்த்தியுள்ளது தேவஸ்தானம் போர்டு.

அறைவாடகை....
பொதுவாக நான்கு பேர் தங்கும் வசதியுடைய, அறை ஒன்றின் வாடகை, 400 ரூபாயில் இருந்து, 1,600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டெபாசிட்....
அதோடு, அறை எடுக்கும் போது, 1,600 ரூபாய் டெபாசிட் என இருந்தது தற்போது , 3,200 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது.

கூடுதல் வாடகை...
அதேபோல், இந்த வாடகை, 12 மணி நேரத்துக்கு மட்டுமே. அடுத்த நான்கு மணி நேரத்திற்கு, 30 சதவீதம் கூடுதல் தொகை செலுத்த வேண்டும்.

கட்டண விவரம்...
மேலும், சபரிமலையில், மண்டல மகரவிளக்கு காலத்திலும், இதர மாத பூஜை நாட்களிலும், 40 வகையான பூஜைகள் நடத்தப்படுவதாகவும், அவற்றுக்கான கட்டண விவரங்களையும் தேவஸ்தான போர்டு அறிவித்துள்ளது.

அதிக கட்டணம்....
அதன்படி, மிகக் குறைந்த கட்டணம் நெய்யபிஷேகத்துக்கும், அதிக பட்ச கட்டணம், படி பூஜைக்கும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications