டெல்லி பல்கலை.யில் அனைத்து மாணவர் சேர்க்கை ஒத்திவைப்பு!!
டெல்லி: 4 ஆண்டு பட்டப்படிப்புக்கு பல்கலைக் கழக மானியக் குழுவான யுசிஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தைத் தொடர்ந்து டெல்லி பல்கலைக் கழகத்துக்குட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர்.
டெல்லி பல்கலைக் கழகத்தில் 4ஆண்டு இளங்கலை பட்டபடிப்பு கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவருமே இந்த 4 ஆண்டுகால இளங்கலை பட்டப்படிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்து தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டும் வருகின்றன. இதையெல்லாம் டெல்லி பல்கலைக் கழக நிர்வாகம் கண்டுகொள்வதாகவும் இல்லை. இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடப்பாண்டுக்கான 4 ஆண்டுகால இளங்கலை பட்ட படிப்புக்கான மாணவர் சேர்க்கையையும் தொடங்கிவிட்டது டெல்லி பல்கலைக் கழகம்.
யுசிஜி அதிரடி உத்தரவு
இந்த நிலையில்தான் டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழான 64 கல்லூரிகளில் 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு முறையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழுவான யுசிஜி அதிரடியாக ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.
கடும் நடவடிக்கை
அத்துடன் முந்தைய முறைப்படியே 3 ஆண்டு பட்டப்படிப்பு திட்டத்தின் கீழ்தான் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
மாணவர் சேர்க்கை நிறுத்தல் -மாணவர்கள் பரிதவிப்பு
யுசிஜியின் உத்தரவால் டெல்லி பல்கலைக் கழகத்துக்குட்பட்ட கல்லூரிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக மாணவர் சேர்க்கையை ஒத்திவைத்துள்ளன. இதனால் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.
மாணவர்கள் போராட்டம்
இதனிடையே டெல்லி பல்கலைக் கழகத்துக்கு எதிராக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சம் முன்பாக பல்வேறு மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். உடனடியாக 4 ஆண்டுகால பட்டப்படிப்பு முறையை டெல்லி பல்கலைக்கழகம் திரும்பபெற வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கை.
தலையீடு இல்லை- ஸ்மிருதி இரானி
இவ்விவகாரம் தொடர்பாக பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியோ, டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் யுஜிசி இடையிலான விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது என்றார்.
காங்கிரஸ் கேள்வி
இதனிடையே டெல்லி பல்கலைக்கழகம், 4 ஆண்டுகால பட்டப்படிப்பை கொண்டுவர முற்பட்டபோது யுஜிசி ஏன் அமைதியாக இருந்தது? யுஜிசி தனது கருத்தை ஏன் தெரிவிக்கவில்லை? 4 ஆண்டுகால பட்டப்படிப்பை டெல்லி பல்கலைக்கழகம் செயல்படுத்த நடவடிக்கை எடுத்த போது யுஜிசி அறிவுரை வழங்காதது ஏன்? யுஜிசி பலிகடா ஆக்கப்படுகிறதா? மாணவர்களின் நிலை என்ன? என்று காங்கிரஸ் கட்சியின் மணிஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications