மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விளம்பரத்துக்கு ரூ.1000 கோடியா? - கெஜ்ரிவால் கேள்வி
டெல்லி: மோடி அரசின் 2 ஆண்டுகால நிறைவு விளம்பரத்திற்கு ரூ.1000 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 2-வது ஆண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக ஊடகங்கள் மூலமாக பெரிய அளவில் மத்திய அரசு விளம்பரம் செய்யதுள்ளது.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அரசு விளம்பரங்களுக்காக ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார்.
Modi govt spend on ads for jst ONE event 2 yr bash? Sources- more than Rs 1000cr
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 26, 2016
All Del govt depts total spend less than 150cr for full yr
அத்துடன் டெல்லி ஆம் ஆத்மி அரசு அனைத்து துறைகளுக்கும் சேர்த்து ஒரு ஆண்டுக்கு ரூ.150 கோடிக்கும் குறைவாகவே விளம்பரங்களுக்கு செலவிட்டுள்ளது என்றும் கெஜ்ரிவால் அந்த ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்
அதாவது டெல்லி ஆம் ஆத்மி அரசு விளம்பரத்துக்காக பட்ஜெட்டில் ரூ.526 கோடி ஒதுக்கீடு செய்ததாக கெஜ்ரிவால் மீது கடும் விமர்சனங்கள் அண்மையில் வைக்கப்பட்டது. ஆம் ஆத்மி அரசு பிப்ரவரி முதல் மே மாதம் வரை ரூ.100 கோடிக்கும் மேலாக செலவு செய்ததாக அம்மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது.
இதற்கும் பதிலளிக்கும் வகையில்தான் கெஜ்ரிவால் தமது அரசின் விளம்பர செலவு என்ன என்பதையும் தமது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications