ஏழுமலையானுக்கு ரூ.11 கோடியில் சகஸ்ரநாம லட்சுமி காசு மாலை காணிக்கை
திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.11 கோடியில் சகஸ்ரநாம லட்சுமி காசு மாலை காணிக்கையாக அளிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் ரூ.11 கோடி மதிப்பிலான சகஸ்ரநாம லட்சுமி காசு மாலையை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.
திருப்பதியில் நேற்று 9 நாள்கள் கொண்டாடப்படும் பிரம்மோற்சவம் தொடங்கியது. இதையொட்டி நேற்றிரவு மலையப்பசுவாமி பெரிய சேஷ வாகனத்தில் உலா வந்தார். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ 11 கோடி மதிப்பில் நகை காணிக்கையாக வழங்கப்பட்டது.

சுமார் 5 அடுக்குகள் கொண்ட தங்க சகஸ்கரநாம லட்சுமி காசு மாலையை காணிக்கையாக வெளிநாட்டு வாழ் இந்திய பக்தரான ராமலிங்க ராஜூ என்பவர் வழங்கினார். இதை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் தேவஸ்தான அதிகாரிகளிடம் அவர் வழங்கினார்.












Click it and Unblock the Notifications