ரூ.25 கோடி கொடுக்கிறாயா, ரகசியத்தை வெளியிடவா?: இந்திராணியை மிரட்டிய மகன் மிகைல்?
மும்பை: இந்திராணியின் ரகசியங்களை வெளியே கூறாமல் இருக்க அவரிடம் ரூ. 25 கோடி கேட்டு மகன் மிகைல் போரா மிரட்டியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஷீனா போரா தனது தாய் இந்திராணி முகர்ஜியால் கடந்த 2012ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்திராணி ஷீனாவை கொலை செய்த அன்று தனது மகன் மிகைல் போராவையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் மிகைல் இந்திராணியின் வீட்டில் இருந்து தப்பியோடிவிட்டார்.
இந்நிலையில் மிகைல் பற்றி புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

பொய்
இந்திராணி தனது தற்போதைய கணவர் பீட்டர் முகர்ஜியிடம் மகள் ஷீனா, மகன் மிகைலை தனது தங்கை, தம்பி என்று தெரிவித்திருந்தார்.

மிகைல்
இந்திராணியின் ரகசியங்களை வெளியே தெரிவிக்காமல் இருக்க தனக்கு ரூ.25 கோடி அளிக்குமாறு மிகைல் இந்திராணியிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

பணம்
இந்திராணி தனது மகன் மிகைலுக்கு மாதாமாதம் ரூ.15 ஆயிரம் அளித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் பெங்களூரில் சொத்து வாங்க தனது தாயிடம் ரூ.25 கோடி கேட்டு மிரட்டியுள்ளாராம்.

கார்
கையில் அவ்வளவாக பணம் இல்லாமல் இருந்த மிகைல் ரூ.12 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஷீனாவின் கொலை குறித்து தெரிந்திருந்த மிகைல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே அது பற்றி ஏன் போலீசாரிடம் தெரிவிக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. கொலை, உறவு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி மிகைல் இந்திராணியை மிரட்டியுள்ளார்.

ஷீனா
ஷீனாவின் நெருங்கிய தோழி ஒருவர் கவுஹாத்தியில் உள்ள போராவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த மிகைல் அவரிடம் ஷீனா மேல்படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளதாகக் கூறி மழுப்பியுள்ளார். மிகைலின் நடவடிக்கை ஷீனாவின் தோழிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications