ரூ. 55 கோடி மின்சார "பில்"... ராஞ்சி நபருக்கு "ஷாக்" கொடுத்த மின்வாரியம்

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த கிருஷ்ண பிரசாத் என்பவர் வீட்டுக்கு வந்த மின்வாரியத்தினர், நீங்கள் ரூ. 55 கோடி கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியதைக் கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்து விட்டார்.

திருமண நிகழ்ச்சிக்குப் போய் விட்டு வீடு திரும்பிய அவர் இந்த மின்சார பில்லைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டார். அதை விட அதிர்ச்சியாக, கிருஷ்ண பிரசாத்தின் 55 வயது தாயாருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு விட்டது. அவரை டாக்டரிடம் கொண்டு போய் சகஜ நிலைக்குக் கொண்டு வந்தனராம்.

Rs. 55 Crore Electricity Bill Leaves This Family in Shock

கிருஷ்ணபிரசாத் குடும்பம், கத்ரு என்ற இடத்ததில் ஒரு நடுத்தர 2 பெட்ரூம் வீட்டில் வசித்து வருகிறது. இவர்களது வீட்டில் ஏசி கூட இல்லை. ராஞ்சியில் அடிக்கடி பவர் கட் வேறு. அதாவது ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் வரை மின்சாரம் இருக்காதாம்.

இந்த நிலையில்தான் இப்படி ஒரு அதிர்ச்சிகரமான பில்லைக் கொடுத்துள்ளனர் இபி காரர்கள். இந்த அலட்சியமான பில் விவகாரம் தொடர்பாக 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

பில்லைக் கேள்விப்பட்ட அதிர்ச்சியில் எனது தாயார் இறந்தே போயிருப்பார். அதிர்ஷ்டவசமாக தப்பினார். இவர்களையெல்லாம் சும்மா விடக் கூடாது. நான் கோர்ட்டில் வழக்குத் தொடரப் போகிறேன் என்று கோபத்துடன் கூறுகிறார் பிரசாத்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+