நம் தாய்மார்கள் ஒன்றும் குழந்தை உற்பத்தி செய்யும் ஃபேக்டரி அல்ல: ஆர்.எஸ்.எஸ். தலைவர்
கான்பூர்: நம் தாய்மார்கள் ஒன்றும் குழந்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அல்ல என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
கான்பூர் நகரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,
நம் தாய்மார்கள் ஒன்றும் குழந்தைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அன்று. குழந்தை பெறுவது தனிநபரின் முடிவு ஆகும். சில கருத்துகளை தெரிவிக்கும் முன்பு நன்கு யோசிக்க வேண்டும் என்றார். மோகன் பகவத் சாக்ஷி மகராஜை மனதில் வைத்து தான் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்து மதத்தை பாதுகாக்க தாய்மார்கள் குறைந்தபட்சம் 4 குழந்தைகள் பெற வேண்டும் என்று உன்னாவ் தொகுதி பாஜக எம்.பி.யான சாக்ஷி மகராஜ் கடந்த மாதம் தெரிவித்து பெரும் சர்ச்சையை கிளப்பினார்.
4 குழந்தைகளில் ஒன்றை ராணுவத்திற்கும், மற்றொன்றை கடவுளின் பணி செய்யவும் அனுப்ப வேண்டும். மற்ற 2 குழந்தைகள் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சாக்ஷி மகராஜ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications