இருக்கு ஆனா இல்லை..பாஜக அரசுக்கும் ஆர்எஸ்எஸ்க்கும் சண்டையா? மோகன் பகவத் சொன்ன விளக்கம்! மேட்டர் ஓவர்
டெல்லி: பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் இருப்பதாக சொல்லப்படுகிறது. நரேந்திர மோடியை பிரதமர் பதவியில் மாற்ற ஆர்எஸ்எஸ் வலியுறுத்தி வந்ததாகவும் தகவல்கள் உலாவின. இந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத். மத்திய அரசுடன் ஆர்எஸ்எஸ்-க்கு இடையே முரண்கள் இருக்கலாம். ஆனால் சண்டை இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.
ராஷ்ட்ரிய சுயம்சேவாக் சங்க் என அழைக்கப்படும் ஆர்எஸ்எஸ் மிக நீண்ட காலமாக இந்தியாவில் பணியாற்றிய வருகிறது. வலதுசாரி கொள்கையுடன் செயல்பட்டு வரும் இந்த அமைப்பின் தற்போதைய தலைவராக மோகன் பகவத் இருக்கிறார்.
இந்நிலையில் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியதாகவும் யூகங்கள் கிளம்பின. ஆனால் அதற்கு பிறகு இந்த விவகாரம் அத்தோடு முடிந்து போனது.

ஆர்எஸ்எஸ்
இந்த நிலையில் மத்திய அரசுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் முரண்கள் இருக்கலாம், ஆனால் சண்டை இல்லை என மோகன் பகவத் விளக்கம் அளித்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூறாவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு டெல்லி விக்யான் பவனில் செய்தியாளர்களை சந்தித்த மோகன் பகவத், மத்திய அரசுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இடையே உள்ள உறவைப் பற்றி விரிவாக எடுத்துரைத்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் எங்களுக்குச் சிறந்த ஒருங்கிணைப்பு இருக்கிறது. சில சமயங்களில் முரண்பாடுகள் ஏற்படலாம். ஆனால் அது சண்டை என்று பொருள் கொள்ள முடியாது. எங்களுக்கிடையே எவ்வித பிரச்சனையும் இல்லை.
மோகன் பகவத்
பாஜக அரசின் முடிவுகள் RSS வழிகாட்டுதலின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். ஆர்எஸ்எஸ் யாருக்கும் இந்த முடிவை தான் எடுக்க வேண்டுமென வலியுறுத்தாது. அதே நேரத்தில் ஆலோசனைகள் மட்டுமே வழங்கும். நாட்டை நடத்தும் கட்சி தான் பாஜக. அவர்கள் தான் அதில் நிபுணர்கள். எங்களின் பங்கு ஆலோசனை அளிப்பது மட்டுமே. நான் 50 ஆண்டுகளாக சகாவை நடத்தி வருகிறேன். யாராவது ஆலோசனை சொன்னால் கேட்பேன்.
பாஜக ஆர்எஸ்எஸ்
அதுபோல் தான் அரசு. ஆட்சி தொடர்பாக முடிவுகளை எடுப்பது பாஜக தான். எங்களால் எதுவும் திணிக்கப்படுவதில்லை. ஜேபி நட்டாவின் பாஜக தலைவர் பதவிக் காலம் 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே முடிந்திருந்தாலும், இன்னும் புதிய தலைவர் அறிவிக்கப்படவில்லை. தலைமை குறித்த முடிவுகளை நாங்களே எடுத்து இருந்தால் இத்தனை நாட்கள் காத்திருப்போமா? தங்களுக்கான நேரத்தில் அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.
ஆர்எஸ்எஸ் விளக்கம்
அத்துடன், RSS-ஐ எதிர்த்து வந்தவர்களே தங்களது நிலைப்பாட்டை மாற்றிய பல உதாரணங்களை காட்ட முடியும். ஜெயப்பிரகாஷ் நாராயண் முதல் பிரணாப் முகர்ஜி வரை, பலர் எங்களைப் பற்றிய தங்களது பார்வையை மாற்றியுள்ளனர். ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் மத்திய அரசுக்கு சண்டை" என பேசப்படும் வதந்திகளை முற்றாக மறுக்கிறேம்ன். நாங்கள் மத்திய மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்தே செயல்படுகிறோம்" என தெளிவுபட கூறியுள்ளார். இதன் மூலம் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் மோதல் என்ற விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மோகன் பகவத்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications