மோடியை நேதாஜியுடன் ஒப்பிட்டு ஆர். எஸ்.எஸ் தலைவர் புகழாரம்

Subscribe to Oneindia Tamil

RSS compares Modi to Subhash Chandra Bose, Vajpayee to Mahatma Gandhi
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை நேதாஜி சுபாஷ் சந்திர போஸுடனும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை மகாத்மா காந்தியுடனும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் ஒப்பிட்டு பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சி.என்.என். ஐ.பி.என் தொலைக்காட்சி அளித்த பேட்டியில் இந்தரேஷ்குமார் கூறியிருப்பதாவது:

வாஜ்பாயும் மோடியும் ஒன்றுதான். ஒருவர் மகாத்மா காந்தி போன்றவர் மற்றொருவர் சுபாஷ் சந்திர போஸ் போன்றவர். வாஜ்பாயும் மோடியும் ஒரே மாதிரியான கொள்கையை பின்பற்றுகிறவர்கள்.

மதச்சார்பின்மை மற்றும் தேசியவாதத்தை இருவரும் பின்பற்றுவதில் ஒரே மாதிரியானவர்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான் உத்தர பிரதேசத்தில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை வழி நடத்துகிறது.

நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளரக அறிவித்ததில் அத்வானி வருத்தம் அடையவில்லை. அதே நேரத்தில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த நேரம் குறித்துதான் அவர் வருத்தம் அடைந்தார்.

இவ்வாறு இந்தரேஷ்குமார் கூறினார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+