பாஜக தலைவராக அமித்ஷா.... ஆர்.எஸ்.எஸ். ஒப்புதல்! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியின் வலது கரமான அமித்ஷாவை நியமிக்க அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து பாஜகவின் தலைவராக அமித்ஷாவை நியமிக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான ராஜ்நாத்சிங் உள்துறை அமைச்சரானதைத் தொடர்ந்து அக்கட்சியின் புதிய தலைவர் யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வந்தது. இது குறித்து பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைவர்களிடமும் ஆலோசிக்கப்பட்டது.

நட்டா, மதூர்
பாரதிய ஜனதாவின் புதிய தலைவர் பட்டியலில் ஜே.பி.நட்டா, ஓம் மதூர் ஆகியோர் பெயர் அடிபட்டது. ஆனாலும் அமித்ஷாவுக்கே அதிக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

மோடியின் வலது கரம்
குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்த போது அமித்ஷாவுக்கு உள்துறை உள்பட 10 துறைகள் ஒதுக்கப்பட்டன. இதனால் நரேந்திர மோடியின் வலதுகரமாக அமித்ஷா உருவானார். சொராபுதீன் ஷேக், துளசிராம் பிரஜாபதி என்கவுன்ட்டர் வழக்குகள், இளம்பெண் வேவு விவகாரம் என பல சர்ச்சைகளில் அமித்ஷா சிக்கியுள்ளார்.

உ.பி.யில் அறுவடை
அமித் ஷா தற்போது உத்தரப்பிரதேச மாநில பாரதிய ஜனதா பொறுப்பாளராக இருக்கிறார். லோக்சபா தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் 71 இடங்களை பாரதிய ஜனதா கைப்பற்றியதற்கு அமித்ஷாவின் வியூகமும் முக்கிய காரணம்.

ஆர்.எஸ்.எஸ்.
இதனாலேயே அமித்ஷாவையே பாஜகவின் தலைவராக நியமிக்கலாம் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

எந்த நேரத்திலும் அறிவிப்பு
இதைத் தொடர்ந்து அமித்ஷாவை பாஜக தலைவராக நியமித்து எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு!












Click it and Unblock the Notifications