சிறையில் தொடர்ந்து சலுகைகள் அனுபவித்து வரும் சசிகலா... பார்வையாளர்களை சந்திப்பதில் அத்துமீறல்
பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை அவரது உறவினர்கள் அவ்வப்போது சந்தித்து வருவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கிடைத்துள்ளது.
Recommended Video

பெங்களூர்: சிறை கைதிகளை பார்வையாளர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் சந்திக்க வேண்டும் என்ற விதியை பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா மீறியுள்ளதாக ஆர்டிஐ மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சசியும், இளவரசியும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சசிகலா சிறையில் சலுகைகளை அனுபவித்து வருவதாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது. சசிகலாவுக்கு 5 அறைகள் இருப்பதும், தனியே சமையலறை இருப்பதும் இதற்காக அவர் சிறைத் துறை ஏடிஜிபி சத்தியநாராயண ராவுக்கு ரூ. 2 கோடி லஞ்சமாக கொடுத்துள்ளதாகவும் சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா புகார் கூறியிருந்தார்.

வீடியோ காட்சிகள்
இதை விசாரிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை கமிஷனை மாநில அரசு அமைத்தது. அதில் சசிகலா சலுகைகளை பெற்றது உண்மை என்று தெரியவந்தது. மேலும் அவரும் இளவரசியும் சிறையிலிருந்து ஷாப்பிங் சென்றுவிட்டு திரும்புவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகின. சிறையில் உள்ள சசிகலாவை யாரெல்லாம் சந்தித்திருக்கிறார்கள் என்ற தகவலை ஆங்கில ஊடகம் ஒன்று ஆர்டிஐ மூலம் கேட்டு பெற்றது. இதற்கு சிறைத் துறை அதிகாரிகள் சில தகவல்களை கொடுத்துள்ளனர்.

விதிமீறல்
அதில் கடந்த 26.4. 2017-இல் விவேக் ஜெயராமனும் அவருடைய மனைவியும் இளவரசியை சந்தித்துள்ளனர். இதை தொடர்ந்து மே 6 2017-இல் கிட்டதட்ட 10 நாட்களில் மீண்டும் இளவரசியை விவேக் சந்தித்துள்ளார். தண்டனை கைதிகளை 15 நாட்களுக்கு ஒரு முறையே சந்திக்க முடியும் என்ற விதியை மீறிய செயலாகவே இது பார்க்கப்படுகிறது.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் சந்திப்பு
அதுபோல் 12.5.2017-இல் சசிகலாவை அவரது வழக்கறிஞர் அசோகன் சந்தித்துள்ளார். பின்னர் 10 நாட்கள் இடைவெளியில் அதாவது மே 22-ஆம் தேதி அசோகன் , சசிகலாவை மீண்டும் சந்தித்துள்ளார். அதுபோல் சசிகலாவை அவரது அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் பிப்ரவரி 16, 17 ஆகிய தேதிகளில் தொடர்ந்து இரு நாட்கள் சந்தித்துள்ளார். அதன்பின்னர் பிப்ரவரி 18, 20, 23, 28, மார்ச் 1-ஆம் தேதி ஆகிய தேதிகளில் ஒரு நாள் விட்டு மறு நாளோ அல்லது இரு நாட்களுக்கு ஒரு முறையோ பார்வையாளர்களை அவர் சந்தித்து வருவது தெரியவந்துள்ளது.

டிடிவி தினகரன் சந்திப்பு
கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி ஆர்கே நகர் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் வெற்றி பெற்ற தினகரன் டிசம்பர் 28-ஆம் தேதி சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்தார். அப்போது அங்குள்ள பதிவேட்டில் அவர்கள் சந்தித்தாக குறிப்பிட்டிருந்த நேரம் பிற்பகல் 12.10 முதல் 12.55 வரை மட்டுமே. ஆனால் ஆங்கில ஊடகத்தின் நிருபர் கிட்டதட்ட 45 நிமிடங்கள் சசிகலாவும் தினகரனும் சந்தித்தனர் என்று பதிவேடு கூறும்போது அவர் சிறை வளாகத்தில் 3 மணி நேரமாக உள்ளே இருந்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறையில் விதிமீறல் இல்லை
இதற்கு தினகரன் கூறுகையில் பார்வையாளர்கள் ஒருவர் பின் ஒருவராக சென்று சசிகலாவை சந்திப்போம். ஒருவர் பார்த்துவிட்டு வந்து காத்திருப்பு அறையில் காத்திருப்பர். இதுபோல் ஒன்றன் பின் ஒன்றாக சந்தித்துவிட்டு அனைவரும் ஒரே நேரத்தில் வெளியே வருவோம். எனவே சசிகலாவை சிறைத் துறை விதிகளுக்குட்பட்டே சந்தித்தோம். காத்திருக்கும் நேரங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று விளக்கமளித்துள்ளார். எனினும் குறுகிய நாட்களில் சசிகலாவை பார்வையாளர்களையும், வழக்கறிஞர்களையும் சந்தித்துள்ளது விதிகளை மீறிய செயலாகவே கருதப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications