சபரிமலையில் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பதில் புதிய சிக்கல்.. இது தான் காரணம்
சபரிமலை: இன்று முதல் 5000 பக்தர்களை கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய முன்பதிவு செய்ய முடியவில்லை. ஏனெனில் அரசு இன்னும் ஆன்லைன் முன்பதிவு தொடங்கவில்லை.
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், காவல் துறை சனிக்கிழமை இரவு ஆன்லைன் முன்பதிவுக்கான வசதியைத் திறக்கவில்லை. இதனால் இன்று 5000 பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.
கொரோனா காரணமாக , சபரிமலை புனித பயணம் செல்லும் பக்தர்கள் ( யாத்ரீகர்கள்) தரிசனத்திற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

புக்கிங் தொடங்கவில்லை
ஆனால் ஒரு நாளைக்கு 2000 பேர் வரையில் தான் அனுமதிக்கப்படுகிறார்கள். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 3,000 பேர் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கோரிய வழக்கில் தினமும் 5000 பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் கேரள அரசு இன்று முன்பதிவை திறக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. கூடுதல் புக்கிங் தொடங்கவும் இல்லை.

அனுமதி வழங்கவில்லை
சபரிமலையில் பணியாற்றும் கோவில் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கொரோனாவால் அதிக அளவு பாதிக்கப்பட்டதால் அம்மாநி தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி வழங்கவில்லை.

நெகட்டிவ் சான்றிதழ்
சன்னதிக்கு வருகை தரும் பக்தர்கள் (யாத்ரீகர்கள்) டிசம்பர் 26 முதல் ஆர்.டி.பி.சி.ஆர், அல்லது எக்ஸ்பிரஸ் நாட் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. யாத்ரீகர்களும், ஊழியர்களும் நிலக்கலில் நெகட்டிவ் சான்றிதழை வழங்க வேண்டும்.

விலை அதிகம்
தற்போது, 24 மணி நேரத்திற்குள் வழங்கப்பட்ட ஆன்டிஜென் சோதனை சான்றிதழ் யாத்ரீகர்களிடமிருந்து பெறப்படுகிறது. அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை சான்றிதழை கட்டாயமாக்கவும் அண்மையில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், நிலக்கலில் ஆர்.டி.பி.சி.ஆர், அல்லது எக்ஸ்பிரஸ் நாட் சோதனைக்கு எந்த வசதியும் இல்லை. நிலக்கலில் இந்த சோதனைகளுக்கான வசதிகளை ஏற்பாடு செய்ய முடியவில்லை என்று கேரள சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்தார். ஆன்டிஜென் சோதனையுடன் ஒப்பிடும்போது, இந்த சோதனைகள் விலை உயர்ந்தவை மற்றும் முடிவுகள் தாமதமாகும்.

கட்டுப்பாடுகள்
எனவே இந்த சோதனைகளுக்கு ஒரு நபரிடமிருந்து ரூ .2100 முதல் ரூ .2700 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆகவே புனித யாத்திரைக்காக சன்னதிக்கு வருகை தரும் பக்தர்கள் ஒருவேளை ஆன்லைனில் புக்கிங் செய்து வந்தாலும் அதற்காக அதிக விலை கொடுக்க வேண்டியதிருக்கும். அதே சமயம், ஒரு நாளைக்கு அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கும் போது சபரிமலையில் செய்யப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் திருத்தியமைக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியமும் காவல்துறையினரும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications