சபரிமலைக்கு சென்ற ஆந்திர மாநில பெண் மீது தாக்குதல.. உச்சகட்ட பதற்றம்
நிலக்கல்: சபரிமலைக்கு சென்ற ஆந்திர பெண் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10- 50 வயது வரையிலான பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து போராட்டக்காரர்கள் வன்முறை, கலவரங்களில் ஈடுபட்டு 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை திருப்பி அனுப்பும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதுவரை 3 பெண்கள் சபரிமலைக்கு சென்று திருப்பி அனுப்பப்பட்டு விட்டனர். அங்கு பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பாலம்மா (45).
இவர் இன்று சபரிமலைக்கு சென்றார். அப்போது நடைப்பந்தல் என்ற இடத்தில் பாலம்மாவை திரும்பி போகுமாறு போராட்டக்காரர்கள் கேட்டுக் கொண்டனர். எனினும் அவர் செல்ல மறுத்துவிட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள் பாலம்மா மீது தாக்குதல் நடத்தினர்.
இதில் காயமடைந்த பாலம்மா அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications