இன்று சபரிமலை நடை திறப்பு: 18 படிகளுக்கு பிரதிஷ்டை
திருவனந்தபுரம்: சபரிமலை நடை இன்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை காலை 18 படிகளுக்கு பிரதிஷ்டை நடக்கிறது. வரும் 22ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.
இன்று மாலை 5.30 மணிக்கு மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். புதிதாக ஐம்பொன் பதிக்கப்பட்ட 18 படிகளில் சுத்தி கலச பூஜையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நடத்துவார். வேறு பூஜைகள் நடக்காது; இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை காலை 5 மணிக்கு நடை திறந்து அபிஷேகம் நடக்கும்.

பின்னர் 18 படிகளுக்கு பிரதிஷ்டை, கும்பாபிஷேக சடங்குகள் தொடங்கும். காலை 10 மணி முதல் 10.30 மணிக்குள் பிரதிஷ்டை பூஜைகள், கும்பாபிஷேகத்தை தந்திரி நடத்துவார். அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். பின், ஐப்பசி மாத பூஜைகளுக்காக வரும் 17ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கும். அன்று பூஜைகள் கிடையாது; இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
வரும் 18ம் தேதி காலை 5 மணிக்கு நடை திறந்து அபிஷேகத்துக்கு பின், நெய் அபிஷேகம் தொடங்கும். காலை 7.30 மணிக்கு உஷபூஜை நடக்கும். தொடர்ந்து, கார்த்திகை ௧ல் இருந்து ஒரு ஆண்டுக்கான மேல்சாந்தி தேர்வு நடக்கும். வரும் 22ம் தேதி வரை நடை திறந்திருக்கும். எல்லா நாட்களிலும் படிபூஜை, சகஸ்ர கலசம், களபாபிஷேக பூஜைகள் நடக்கும்.

வரும் 22ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். புதிய 18ஆம் படி பிரதிஷ்டை ஏற்ப்பாடுகளை தேவசம் போர்டு நிர்வாகம் செய்து வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications