கிரிக்கெட் கடவுளின் வாரிசுன்னா சும்மாவா..... வாய்ப்புகள் தானாக தேடி வருகிறது!
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா, சமூகதளங்களில் பிரபலமாகி வருகிறார். விரைவில் சினிமா வருவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி: கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் அடித்த ஒவ்வொரு பந்தும், எடுத்த ஒவ்வொரு ரன்னும் அவருடைய சாதனைகளை சொல்லிக் கொண்டே இருக்கும். சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவர் பற்றிய செய்திகள் வராத நாளே இல்லை. தன்னுடைய சாதனைகளால் பேசப்பட்ட சச்சின் டெண்டுல்கர், வாரிசாலும் பேசப்படுகிறார்.
சச்சின் மகன் அர்ஜூன் என்ன செய்துள்ளார் என்று நீங்க கேட்க வந்தால், சச்சினைப் பற்றி உங்களுக்கு சரியாகத் தெரியவில்லை என்றே அர்த்தம். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ரமேஷ் டெண்டுல்கருக்கும், குழந்தை நல மருத்துவரான அஞ்சலிக்கும் இரண்டு வாரிசுகள். அர்ஜூன் கடைக்குட்டிதான். முதல் வாரிசு, சாரா பற்றிதான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

அப்படியே அம்மா அஞ்சலியின் ஜெராக்ஸ் காப்பிபோல இருக்கும் 20 வயதாகும் சாரா, கல்லூரி படிப்பையெல்லாம் முடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு சினிமாவில் நடக்கும் வாய்ப்பு வந்தது. அப்போது அதை சச்சின் மறுத்தார். சாராவுக்கு படிப்புதான் முக்கியம் என்று சச்சின் கூறியிருந்தார்.
சரி இப்போதுதான் படிப்பு முடிந்துவிட்டதே என்று, சிலர் சாராவை சினிமாவுக்கு அழைத்து வருவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். சமீபகாலமாக பல்வேறு பொது நிகழ்ச்சிகளும் சாரா கலந்து கொண்டு வருகிறார். இதைத் தவிர இன்ஸ்டாகிராமில், தன்னுடைய பல்வேறு படங்களை அவர் வெளியிட்டு வருகிறார்.
மிகவும் தேர்ந்த மாடல் போல், வித்தியாசமான ஆடைகளுடன் கண் திருஷ்டி படும் அழகுடன் சாரா உள்ளார். மிக விரைவில் அவர் சினிமாவுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக பட்சிகள் கூறுகின்றன. அதற்கு முன், சமூகதளங்களில் சாராவின் படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications