ராஜஸ்தான் மாநில காங். தலைவராக சச்சின் பைலட் நியமனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக மத்திய அமைச்சர் சச்சின் பைலட் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோக்சபா தேர்தல் நெருங்குவதால் சில மத்திய அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்து கட்சிப் பணிக்கு அனுப்ப காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. இந்த ராஜினாமா பட்டியலில் சச்சின் பைலட், ஜோதிராதித்ய சிந்தியா பெயர்கள் அடிபட்டு வந்தன.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக மத்திய அமைச்சர் சச்சின் பைலட் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications