Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாப் புகழும் டிராவிட்டுக்கே.. பிசிசிஐ, சச்சின், சேவாக் வாழ்த்து!

உலக ஜூனியர் உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல காரணமாக இருந்த ராகுல் டிராவிட்டுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஜூனியர் உலகக்கோப்பையை வென்று அசத்திய இந்தியா | Oneindia Tamil

    டெல்லி: உலக ஜூனியர் உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல காரணமாக இருந்த ராகுல் டிராவிட்டுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

    நியூஸிலாந்தில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இறுதிப்போட்டியில் மோதிய ஆஸ்திரேலியாவை 47.2 ஓவர்களில் ஆல்அவுட்டாக்கிய இந்திய அணி 38.5 ஓவர்களில் வெற்றியை ருசித்தது.

    இதன்மூலம் 4வது முறையாக இந்திய அணி ஜூனியர் உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது. நடப்பு தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் அலுங்காகமல் குலுங்காமல் கோப்பையை தட்டியுள்ளது இந்திய அணி.

    வாழ்த்து மழையில் டிராவிட்

    சாதனை படைத்த இந்திய அணிக்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கோப்பையை வெல்ல காரணமாக இருந்த ஜூனியர் அணியின் கோச் ராகுல் டிராவிட் பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

    பெரிய டிம் வொர்க்குடன்..

    பெரிய டிம் வொர்க்குடன்..

    உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய ஜூனியர் அணிக்கு சச்சின் டென்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பெரிய டீம் வொர்க்குடன் பெரிய கனவு நனவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ராகுலுக்கு பெரிய வாழ்த்து

    நமது உலக சாம்பியன்களுக்கு வாழ்த்து என்றும் உங்களால் பெருமை கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ராகுல் மற்றும் பாராஸின் வழிகாட்டுதலுக்கு பெரிய வாழ்த்துக்கள் என்றும் சச்சின் தெரிவித்துள்ளார்.

    எல்லப்புகழும் டிராவிட்டுக்கே

    இதேபோல் சேவாக் பதிவிட்டுள்ள டிவிட்டில் இந்த இளம் குழந்தைகளுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட டிராவிட்டுக்கே அனைத்து புகழும் சேரும் இதனால் அனைத்து இளைஞர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவரைப் போன்ற ஒரு லெஜன்ட் உலகக்கோப்பையை தனது கைகளில் பெற தகுதியானவர் என்றும் உலகக்கோப்பையை பெற அவர் பொருத்தமானவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

    டிராவிட் வழிகாட்டுதலில்

    டிராவிட் வழிகாட்டுதலில்

    ஜூனியர் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐயின் தற்காலிக தலைவரான சிகே கண்ணா வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதலின் கீழ் அணிக்கு சிறப்பாக விளையாடியது என அவர் பாராட்டியுள்ளார்.

    பிசிசிஐக்கு பரிந்துரை

    அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் 30 லட்சம் ரூபாயும் ஊழியர்களுக்கும் தேர்வுக்குழுக்களுக்கும் 25 லட்சம் ரூபாய் வழங்க நான் அவர்களுக்கு பரிந்துரைப்பேன் என்றும் சிகே கண்ணா தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+