சச்சின் ரொம்ப மோசம்.. அதை விட படு மோசம் ரேகா!
டெல்லி: ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், ராஜ்யசபாவுக்கு வருவதில் மிகவும் ஒழுங்கீனமாக இருக்கிறார். அவரை விட மோசமாக இருக்கிறார் நடிகை ரேகா.
இந்த இருவரும் ராஜ்யசபா எம்.பிக்களாக உள்ளனர். இருவரும் நியமன எம்.பிக்கள். ஆனால் ராஜ்யசபாவுக்கு வருவதும் இல்லை, பேசுவதும் இல்லை. வெட்டியாக மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டுள்ளனர்.
இதில் சச்சினாவது பரவாயில்லை. ரேகா சுத்த மோசம் என ராஜ்யசபா ரெக்கார்டுகள் கூறுகின்றன.

ரொம்ப மோசம்
கிரிக்கெட்டில் சச்சின் பயங்கர டெர்ரராக இருந்திருக்கலாம். ஆனால் ராஜ்யசபாவுக்கு வருவதில் அவர் மகா மோசம். மொத்தம் உள்ள 12 நியமன உறுப்பினர்களில் சபைக்கு வருவதில் சச்சின் மோசமாக இருக்கிறார். இந்த வரிசையில் அவருக்கு 2வது இடம் கிடைத்துள்ளது.

வெறும் 6.6 சதவீத வருகைதான்
ராஜ்யசபாவில் சச்சினின் வருகைப் பதிவு என்பது வெறும் 6.6 சதவீதமாகவே உள்ளது. 2017, மார்ச் 31ம் தேதி நிலவரப்படி மொத்தம் நடந்த 348 கூட்டங்களில் 23ல் மட்டுமே சச்சின் பங்கேற்றுள்ளார்.

22 கேள்விகள்
ராஜ்யசபாவில் சச்சின் 22 கேள்விகள் கேட்டுள்ளார். ஆனால் எந்த ஒரு விவாதத்திலும் இவர் கலந்து கொண்டது கிடையாது. 2012ம் ஆண்டு முதல் நியமன உறுப்பினராக இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேகா படு மோசம்
மறுபககம் 2012ம் ஆண்டிலிருந்து உறுப்பினராக இருந்து வரும் நடிகை ரேகா படு மோசமாக இருக்கிறார். சச்சினை விட 5 நாட்கள் குறைவாகவே இவர் ராஜ்யசபாவுக்கு வந்துள்ளார். அதாவது 18 நாட்கள்தான் இவர் வந்துள்ளார். இவரது வருகைப் பதிவு 5.17 சதவீதமாக உள்ளது.

ஒரு கேள்வி கூட கேட்டதில்லை
வந்த 18 நாட்களும் சும்மா உட்கார்ந்து வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளார். ஒரு கேள்வியும் கேட்டதில்லை. எந்த விவாதத்திலும் கலந்து கொண்டதும் இல்லை. எதற்காக வந்தார் என்பதே தெரியவில்லை.

ரூ. 21.19 கோடிக்குப் பரிந்துரை
எம்.பிக்கள் நிதியிலிருந்து சச்சின் ரூ. 21.19 கோடி அளவிலான பணிகளுக்குப் பரிந்துரைத்துள்ளார். அதுவே ரேகா வெறும் ரூ. 9.28 கோடி அளவுக்கே பரிந்துரைத்துள்ளார்.

செலவில் ரேகா நம்பர் 1
அதேசமயம், செலவுக் கணக்கில் ரேகா முதலிடம் பிடிக்கிறார். அதாவது ஒரு நாளைக்கு அவரது செலவு ரூ. 3.6 லட்சமாகும். சச்சின் செலவுக் கணக்கு ஒரு நாளைக்கு ரூ. 2.56 லட்சமாகும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications