ஆதித்யா தாக்ரேவுக்கு பாதுகாப்பு இசட் பிரிவாக உயர்வு! சச்சினுக்கு பாதுகாப்பு அதிரடியாக குறைப்பு!
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்ரேவுக்கு பாதுகாப்பு உயத்தப்பட்டு 'இசட்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெடுல்கருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டு எக்ஸ்(x) கிரேட் நீக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்ரேவின் மகனும் சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ வுமான ஆதித்யா தாக்கரேவின் பாதுகாப்பு "இசட்" வகைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேநேரம் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இதுவரை அவருக்கு அளிக்கப்பட்ட , "எக்ஸ்" வகை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி கூறினார்,

எக்ஸ் பிரிவு பாதுகாப்பு
46 வயதாகும் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரான சச்சின் டெண்டுல்கர், தனது வீட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம் போலீஸ் எஸ்கார்ட் வழங்கப்படும். இதுவரை "எக்ஸ்" பிரிவின் கீழ், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் வீட்டை பாதுகாக்க 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஒரு போலீஸ்காரர் பயன்படுத்தப்பட்டார் என்றும் அந்த காவல் அதிகாரி கூறினார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்
ஆதித்யா தாக்கரே மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து மகாராஷ்டிரா அரசின் அதிகாரிகள் குழு பரிசீலித்த பின்னரே இந்த பாதுகாப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

சரத்பவாருக்கு இசட் பிளஸ்
ஆதித்யா தாக்கரே மற்றும் சச்சின் டெண்டுல்கர் தவிர 90க்கும் மேற்படட விஜபிக்களின் பாதுகாப்பு குறித்தும் மகாராஷ்டிரா அரசின் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. அதில் முக்கியமானவர் என்றால் என்சிபி தலைவர் சரத் பவார். அவருக்கு "இசட் +" பாதுகாப்பு தொடர்ந்து அளிக்கப்பட உள்ளது. அதே நேரத்தில் அவரது அண்ணன் மகனும் கட்சித் தலைவருமான அஜித் பவார் 'இசட்' வகை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாஜக அமைச்சர்கள்
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் பாதுகாப்பு "இசட்" பிரிவில் இருந்து "ஒய் +" ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம் முந்தைய பாஜக தலைமையிலான அரசின் பல அமைச்சர்களுக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications