"மட்டா ராம், தொடர்ந்து விளையாடு" மாற்று திறனாளி சிறுவனுக்கு பேட் அனுப்பி.. ஸ்வீட் ஷாக் தந்த சச்சின்!
மாற்று திறனாளி சிறுவனுக்கு சச்சின் கிரிக்கெட் பேட் அனுப்பி வைத்துள்ளார்
Recommended Video
சென்னை: கிரிக்கெட் விளையாடி.. வீடியோ மூலம் வைரலான மாற்று திறனாளி சிறுவனுக்கு சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் பேட் ஒன்றினை பரிசாக அனுப்பி வைத்துள்ளார்.. அத்துடன், "உன் மீதான மற்றும் உன் நண்பர்கள் மீதான அன்பின் அடையாளமே இந்த அன்பளிப்பு. தொடர்ந்து நீ விளையாடு'' என்றும் சச்சின் கடிதம் ஒன்றினை அச்சிறுவனுக்கு கைப்பட எழுதி உள்ளார்.
மாற்றுத்திறனாளி சிறுவன் தன், நண்பர்களுடன்கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வைரல் ஆனது.
அந்த வீடியோவில் ஒரு கிரவுண்டில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்.. அங்குதான் இந்த சிறுவனும் விளையாடுகிறார்.. சிறுவனுக்கு கால்கள் இல்லை.. பேட்டிங் செய்யும்போது, பந்தை அடித்துவிட்டு கைகளை தரையில் ஊன்றி முட்டிகளில் ஊர்ந்து ஊர்ந்து.. ஓடியே நகர்ந்தே ரன்களை எடுக்க செல்கிறார்.

விளையாட்டு
அடுத்து பந்தை எதிர்கொள்ளும் மாணவனிடம் பேட்டை தருவதற்காக, திரும்பவும் கைகளை ஊன்றி ஊன்றியே நகர்ந்து செல்கிறார்.. மற்ற சிறுவர்கள் எப்படி, எந்த வேகத்தில் விளையாடுகிறார்களோ, அதுபோலவே இந்த சிறுவனும் விளையாடி கொண்டிருக்கிறார்.. இந்த வீடியோவை பார்த்த அனைவருக்குமே கண்கள் குளமாகிவிட்டது.. மிகுந்த தன்னம்பிக்கையை இந்த காட்சி நமக்கு ஊட்டுவதாகவும் இருந்தது.

உத்வேகம்
இந்த வீடியோ சச்சின் கண்ணிலும் பட்டுள்ளது.. புத்தாண்டை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள பலரும் பாசிடிவ் கருத்துக்களை வாழ்த்து செய்திகளுடன் பகிர்ந்த நிலையில், சச்சினும் அந்த வீடியோவை ஷேர் செய்திருந்தார். அதில், இந்த சிறுவனின் வீடியோவை எடுத்து ட்வீட் செய்த சச்சின் ''மட்டா ராம் என்ற மாற்றுத்திறனாளி சிறுவன், விளையாடும் இந்த வீடியோவோடு ஒரு உத்வேகமான புத்தாண்டை துவங்குவோம். இந்த வீடியோ என் மனதிற்கு இதமான அனுபவத்தை கொடுத்தது. உங்களுக்கும் இது பிடிக்கும்'' என்று பதிவிட்டிருந்தார்.
|
மட்டா ராம்
சச்சின் இப்படி ஒரு பதிவை போட்டதுமே சோஷியல் மீடியா இன்னும் துரிதமானது.. பரபரப்பாகிவிட்டது.. யார் இந்த மட்டா ராம் என்ற தேடுதலில் இறங்கியது. சத்தீஸ்கர் மாநிலம், தந்தேவாடா மாவட்டத்தில் கட்டேகல்யன் என்ற கிராமம் உள்ளது.. மாவோயிஸ்ட் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம்தான் இந்த தந்தேவாடா.. இந்த கிராமத்தில்தான் சச்சின் கூறிய மட்டா ராம் என்ற சிறுவன் வசித்து வருகிறார்.

கால்கள் இல்லை
7-ம் கிளாஸ் படிக்கும் சிறுவன்.. போலியோ பாதிப்பினால் சின்ன வயசிலேயே கால்களை இழந்துவிட்டார்.. ஆனாலும் மட்டா ராமுக்கு இது ஒரு பிரச்சனையே இல்லை.. தொடர்ந்து தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி வருகிறார். சச்சின் போட்ட பதிவினால் மட்டா ராம் இந்திய அளவில் உற்று நோக்கப்பட்டார். மட்டா ராமின் நண்பரான கோலு என்ற சிறுவன்தான் தன்னுடைய அப்பா செல்போனில் இந்த வீடியோவை படம் பிடித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். ஆனால் அது இந்த அளவுக்கு வீரியத்தை பெற்று தரும் என்று யாருமே நினைக்கவில்லை.

கிரிக்கெட் பேட்
இப்போது, அந்த சிறுவனுக்கு ஒரு ஸ்வீட் ஷாக்கும் சேர்த்து தந்துள்ளார் சச்சின். மட்டா ராமுக்கு ஒரு பாராட்டு கடிதத்தை தன் கைப்படவே எழுதினார்.. அதில், ''நீ ரசித்து விளையாடுவதை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. உன் மீதான மற்றும் உன் நண்பர்கள் மீதான அன்பின் அடையாளமே இந்த அன்பளிப்பு. தொடர்ந்து நீ விளையாடு'' என்று எழுதினார்.. மேலும், தன் கையொப்பமிட்ட கிரிக்கெட் பேட் ஒன்றையும் அந்த சிறுவனுக்கு சச்சின் அனுப்பி வைத்திருக்கிறார்.

பூரிப்பு
இந்த கிரிக்கெட் பேட்டை பார்த்ததுமே சிறுவனுக்கு ஏகப்பட்ட குஷி.. எதிர்பாராத பரிசு.. எதிர்பாராத கடிதத்தை கண்டு திக்குமுக்காடி போய்விட்டார் மட்டா ராம்.. சச்சின் அனுப்பிய அந்த பேட்டை இறுக்கமாக மார்போடு அணைத்து கொண்டுவிட்டார்.. தன் மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்றுகூட தெரியாமல், பூரிப்பில் திளைத்திருக்கிறார்.

மாமனிதன்
"இத்தனை அன்புக்கும், அன்பளிப்புக்கும் என் நன்றி.. ஆனால் சச்சினை ஒருமுறையாவது நேரில் பார்க்க வேண்டும்" என்ற தன் ஆசையை வெளிப்படுத்தி உள்ளார் மட்டா ராம். சச்சின் என்னும் மாமனிதனுக்குள்தான் எத்தனை எத்தனை கருணையின் பக்கங்கள்.. சத்தமில்லாமல் உதவிகளை செய்து வருபவர் சச்சின்.. சர்ச்சைகளுக்கும், குறைகளுக்கும் அப்பாற்பட்டவர்.. உண்மையிலேயே, சச்சின் ஒரு சகாப்தம்தான்!
-
திறமை இருக்கு சரி.. அந்த பண்பை பாருங்க! சுனில் கவாஸ்கரின் காலில் விழுந்து ஆசிபெற்ற வைபவ் சூர்யவன்ஷி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications