கேரள கோவில் தீ விபத்து குறித்து அறிந்து ஆடிப் போன 'கடவுள்'
மும்பை: பரவூர் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறிந்து ஆடிப்போய்விட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பரவூரில் உள்ள புட்டிங்கல் தேவி கோவிலில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு வானவேடிக்கைகள் வெடிக்கையில் ஏற்பட்ட தீவிபத்தில் 107 பேர் உடல் கருகி பலியாகினர். 350 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தீக்காய நிபுணர்கள் 15 பேரை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
Shaken by the tragic news of #Kollam. Thoughts and prayers go out to those affected. May God give us strength and resolve to bear this loss.
— sachin tendulkar (@sachin_rt) April 10, 2016
கொல்லம் செய்தி அறிந்து ஆடிப்போய்விட்டேன். அந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். இந்த இழப்பை தாங்கிக் கொள்ள கடவுள் நமக்கு தெம்பை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications