சுக்குநூறாக கிழித்து தீவைத்து எரிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்கள்...விடாது 'கருப்பு'
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாக்குப் பை நிறைய கட்டுக் கட்டாக 500, 1000 ரூபாய் நோட்டு எரிந்த நிலையில் சிக்கியது.
பரேலி, உ.பி: உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி நகரில் சாக்குப் பைகளில் எரிக்கப்பட்ட நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் சிக்கின. இவை கருப்புப் பணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
நேற்று முதல் நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம். இந்த நிலையில் இப்படி கட்டுக்கட்டாக பணம் எரிக்கப்பட்ட நிலையில் சிக்கியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பரேலியின் சிபி கஞ்ச் பகுதியில், பர்சா கேட் சாலையில் ஒரு நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சிலர் சில சாக்குப் பைகளைக் கொண்டு வந்து தீவைத்து எரித்துள்ளனர். அந்தப் பைகளில் ரூபாய் நோட்டுக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அனைத்துமே செல்லாது என அறிவிக்கப்பட்ட 500,1000 ரூபாய் நோட்டுக்களாகும்.
அத்தனை நோட்டுக்களையும் மெனக்கெட்டு துண்டு துண்டாக வெட்டி பின்னர் அதை நன்றாக கிழித்து அதன் பின்னர் எரித்துள்ளனர் அந்த நிறுவன ஊழியர்கள். இந்த விவகாரம் பரேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களைக் கைப்பற்றியுள்ள அதிகாரிகள், இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக பரேலி முதுநிலை எஸ்பி ஜோகிந்தர் சிங் கூறியுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications