பஞ்சாப்பில் ஆழக் கால் பதிக்கும் ஆர்.எஸ்.எஸ்! அதிர்ச்சியில் அகாலி, காங், ஆம் ஆத்மி!!
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வேகமாக வளர்ந்து வருவது குறித்து அகாலிதளம், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் சிரோன்மணி அகாலிதளத்துடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. இம்மாநிலத்தில் அகாலிதளத்துக்கு எதிரான வலுவான கட்சியாக இருப்பது காங்கிரஸ்.
இந்த இரண்டு கட்சிகளுக்கும் சவால்விடும் வகையில் ஆம் ஆத்மி கட்சியும் 4 எம்.பிக்களைப் பெற்று தனது செல்வாக்கை லோக்சபா தேர்தல் களத்தில் வெளிப்படுத்தியது.
ஆர்.எஸ்.எஸ். விஸ்வரூபம்
இந்த நிலையில் சமூக சேவை என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இம்மாநிலத்தில் தீவிரமாக வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மட்டும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் 4 முறை பஞ்சாப் சென்று ஆலோசனை நடத்தி உள்ளார்.
630 கிளைகள்
இதுவரை மொத்தம் 630 கிளைகளை உருவாக்கியுள்ள ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மேலும் 200 கிளைகளை அமைக்க தீவிரம் காட்டி வருகிறது.
2017தான் இலக்கு
2017ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டசபை தேர்தலை இலக்கு வைத்தே ஆர்.எஸ்.எஸ். மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வேரூன்றுவதன் மூலம் பாஜகவின் வாக்கு வங்கியை பல மடங்கு அதிகரிக்க முடியும். பஞ்சாப் மாநிலத்திலும் பாஜக தனித்து ஆட்சியைக் கைப்பற்றலாம் என்பதுதான் நோக்கம்.
ராஷ்டிரிய சீக் சங்கத்
ராஷ்டிரிய சீக் சங்கத் என்பதுதான் பஞ்சாப்பில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் முன்னணி அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
பல முகங்களில்..
இந்த அமைப்புடன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி, தொழிலாளர் அமைப்பான பாரதிய மஸ்தூர் சங், சமூக சேவைகளுக்கான சேவா பார்தி, பாரதிய விகாஸ் பரிஷத் என 20க்கும் மேற்பட்ட அமைப்புகள் மூலம் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பலப்படுத்தப்படுகிறது,
கிராமங்களில் ஊடுருவல்
அமிர்தசரஸ், லூதியானா, குருதாஸ்பூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் மட்டுமின்றி சிறு நகரங்கள், குக்கிராமங்களிலும் ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் ஆழக் கால் பதித்துள்ளது.
கட்சிகளுக்கு நெருக்கடி
இதனால் பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதளம், காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications