முஸ்லிம்களுக்கு தடை விதிக்கும் தொகாடியாவை சிறையில் அடைக்க வேண்டும்: அகாலிதள், ஆம் ஆத்மி
அமிர்தசரஸ்/டெல்லி; ஹிந்துக்கள் வீட்டை விலை கொடுத்து முஸ்லிம்கள் வாங்குவதை தடை செய்து கொண்டிருக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகாடியாவை சிறையிலடைக்க வேண்டும் என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் வலியுறுத்தியுள்ளது. இதேபோல் தொகாடியாவை சிறையில் அடைக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியும் வலியுறுத்தியுள்ளது.
குஜராத்தின் பாவ்நகரில் முஸ்லிம் தொழிலதிபர் ஒருவ ஹிந்து ஒருவரது வீட்டை விலைக்கு வாங்கி குடியேறியுள்ளார். ஆனால் இதற்கு ஹிந்து தீவிரவாத இயக்கங்கள் தடை விதித்துள்ளன.

மேலும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகாடியோ, அப்படி வாங்கப்பட்ட வீட்டை உடனே ஆக்கிரமித்து "பஜ்ரங்க் தள்"பெயர்ப்பலகையை தொங்க விடுமாறும் ,முஸ்லிம்கள் அந்த வீட்டை விட்டு 48 மணி நேரத்தில் காலி செய்ய வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருப்பதாக வெளியான செய்திகளால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பிரவீன் டொகாடியாவின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பாரதிய ஜனதாவின் முக்கிய கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளத்தின் மூத்த தலைவர் நரேஷ் குஜ்ராலோ, இப்படி பேசுகிற தொகாடியாக்களை கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கோரிக்கை
இதேபோல் ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தொகாடியாவின் பாவ்நகர் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியது. இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது. தொகாடியா மீது குஜராத் முதல்வர் உடனே நடவடிகை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications