சரன் தொகுதியில் ராப்ரி தேவியை எதிர்த்து சகோதரர் சாது யாதவ் சுயேட்சை வேட்பாளராகப் போட்டி!
Subscribe to Oneindia Tamil
பாட்னா: லோக்சபா தேர்தலில் பீகாரின் சரன் தொகுதியில் லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவியை எதிர்த்து அவரது சகோதரர் சாது யாதவ் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

லோக்சபா தேர்தலில் சரன் தொகுதியில் லாலு மனைவி ராப்ரி தேவி, பாடலிபுத்திரா தொகுதியில் மகள் மிசா பாரதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் சரன் தொகுதியில் ராப்ரி தேவியை எதிர்த்து அவரது சகோதரர் அனிருத் பிரசாத் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
ஏற்கெனவே சரன் தொகுதியில் பாஜக தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடி போட்டியிடும் நிலையில் அவரது சகோதரரும் களத்தில் குதித்துள்ளதால் ராப்ரி தேவிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications