கோமியம் குடித்தேன்.. புற்று நோய் பறந்தே போயிருச்சு.. அதிர வைக்கும் பாஜக பெண் சாமியாரின் பேட்டி!
மாட்டு கோமியத்தால் தான் உயிரோடு இருப்பதாக பிரக்யா பெண் சாமியார் கூறி உள்ளார்.
போபால்: "இன்னைக்கு நான் உயிரோடு இருக்கிறேன்னா.. அதுக்கு காரணம் மாட்டு சிறுநீர்தான்.. அதை குடிச்சதாலதான் என் புற்றுநோய் குணமானது" என்று பாஜக பெண் வேட்பாளர் கூறியிருக்கிறார்.
பிரக்யா சிங் தாக்கூர்.. இவர்தான் அந்த வேட்பாளர். கடந்த 2006-ம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர். இப்போதைக்கு ஜாமீனில் வெளியே இருக்கிறார்.
இந்நிலையில் பாஜக சார்பில் போபால் தொகுதியில் போட்டியிட உள்ளார். இதற்காக வேட்பு மனுவையும் தாக்கல் செய்ய வந்தார்.

பிரக்யா சிங்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரக்யா சிங், "நிறைய இடங்களில் மாடுகளை கொடுமைப்படுத்தறாங்க... இது எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு. உண்மையிலேயே மாடுகளும் சரி, மாடு சார்ந்த தயாரிப்புகளும் சரி.. மனிதனுக்கு எவ்வளவோ நன்மைகளை தருகின்றன.

மாட்டு சிறுநீர்
இதில ரொம்ப பெரிய விஷயம் என்னன்னா, எனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது மாட்டின் சிறுநீரை தான் நான் குடித்தேன். அதனால்தான் எனக்கு வந்த புற்றுநோய் குணமானது. இப்படி குடித்து குடித்தே என் புற்றுநோயை நானே குணமாக்கிக்கிட்டேன்.

மகிழ்ச்சி கிடைக்கும்
அது மட்டும் இல்லை.. மாடுகள் ரத்த அழுத்தம் குறையவும் நல்ல தீர்வு. மாட்டின் பின்புறத்தில் இருந்து அதன் முன்பக்கம் வரை தடவி கொடுத்தால், உங்களுக்கே ஒரு மகிழ்ச்சி வரும் பாருங்கள். அந்த மாடுகளுக்கும் மகிழ்ச்சியை தரும். இப்படி பின்பக்கத்தில் இருந்து கழுத்துவரை தடவி கொடுத்தால், நம்முடைய ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்" என தெரிவித்தார்.

மாட்டிறைச்சி
மாடுகள் குறித்த சர்ச்சை ஒரு பக்கமும், மாட்டிறைச்சி சாப்பிடுவர்களை அடித்து கொல்வது மறுபக்கமும் நாட்டில் நடக்கும் நிலையில், பாஜக வேட்பாளர் இப்படி மாடுகள் பற்றி கருத்து சொல்லி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்தான் மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே தான் விட்ட சாபத்தால் தீவிரவாதிகளிடம் சிக்கி பலியானார் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது நினைவிருக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications