தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. ஆட்சியர் அலுவலகத்தில் பதிவான பரபரப்பான சிசிடிவி வீடியோ வெளியீடு
தூத்துக்குடியில் 5 நாட்களாக நீடித்து வந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
India
oi-Vishnupriya
By Lakshmi Priya
Subscribe to Oneindia Tamil
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு நிவாரண நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதன்படி பலியானவர்களுக்கு ரூ.20 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1.5 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படுகிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை 100-ஆவது நாளை எட்டியது. இதையடுத்து பேரணியாக சென்று ஆட்சியரிடம் மனு கொடுக்க அப்பகுதி மக்கள் திட்டமிட்டனர்.
இதை அறிந்த மாவட்ட நிர்வாகம் அங்கு 144 தடை உத்தரவை பிறப்பித்தது. அந்த தடையை மீறி பொதுமக்கள் பேரணியாக ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றபோது அவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 13 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மட்டும் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு இன்று வரை நீட்டிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்பியதால் 144 தடை உத்தரவை திரும்ப பெற்றுக் கொள்வதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
May 27, 2018, 7:56 pm IST
தூத்துக்குடியில் இன்று நள்ளிரவு முதல் இணையதள சேவை
May 27, 2018, 7:56 pm IST
போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் அறிவிப்பு
May 27, 2018, 7:56 pm IST
தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரியுடன் நடந்த ஆலோசனைக்குப் பின்னர் தகவல்
May 27, 2018, 7:25 pm IST
புதுச்சேரி அருகே தமிழக அரசுப் பேருந்துக்குத் தீவைப்பு
May 27, 2018, 7:25 pm IST
புதுவை அருகே கனகசெட்டிக்குளம் பகுதியில் பரபரப்பு
May 27, 2018, 7:25 pm IST
பயணிகளை இறக்கி விட்டு விட்டு தீ வைத்தனர்
May 27, 2018, 7:25 pm IST
பயணிகள் யாருக்கும் காயம் ஏதும் இல்லை
May 27, 2018, 7:25 pm IST
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்
May 27, 2018, 7:22 pm IST
போலீஸ் தரப்பு துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துவதற்காக காட்சிகள் வெளியீடா?
May 27, 2018, 7:22 pm IST
பொதுமக்கள் தரப்பு காட்சிகளை மட்டுமே காவல்துறை வெளியிட்டுள்ளது
May 27, 2018, 7:21 pm IST
20 நிமிட சிசிடிவி காட்சிப் பதிவை வெளியிட்டது தூத்துக்குடி போலீஸ்
May 27, 2018, 7:21 pm IST
முகத்தை மூடியபடி சிலர் கார்களுக்கு தீவைக்கும் காட்சி
May 27, 2018, 7:21 pm IST
கல்வீசித் தாக்கும் நபர்கள் வீடியோல் உள்ளனர்
May 27, 2018, 7:21 pm IST
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாகனங்கள் தாக்கப்படுகின்றன
May 27, 2018, 7:21 pm IST
சில இடங்களில் காட்சிகள் ஒட்டி வெட்டப்பட்டது போல உள்ளது
May 27, 2018, 7:21 pm IST
4 நாட்களுக்குப் பிறகு சிசிடிவி காட்சிகளை போலீஸார் வெளியிட்டுள்ளனர்
May 27, 2018, 5:28 pm IST
பாஜக சார்பில் தூத்துக்குடிக்கு பயணம்: தமிழிசை அறிவிப்பு