அன்வராக மாறிய டோனி.. அலறியடித்து போலீசுக்கு ஓடிய மனைவி.. கைது செய்த போலீஸ்
ஜார்க்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில், தனது உண்மையான மத அடையாளத்தை மறைத்து இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்ததோடு, பின்னர் அவரை மதமாற்றம் செய்ய வற்புறுத்திய வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ராதாநகர் பகுதியைச் சேர்ந்த ஷாஹித் அன்வர் என்ற இளைஞர், தன்னை 'டோனி' என்ற பெயரில் ஒரு இந்துவாக அறிமுகப்படுத்திக் கொண்டு அந்தப் பெண்ணை காதலித்துள்ளார். இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்த நிலையில், இருவரும் டெல்லிக்குச் சென்று அங்குள்ள ஆர்ய சமாஜ் கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு தனது உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்திய ஷாஹித் அன்வர், அந்தப் பெண்ணை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய முயன்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார்படி, ஷாஹித் அன்வர் அவரை ஒரு மௌல்வியிடம் அழைத்துச் சென்று மதமாற்றம் செய்ய வற்புறுத்தியுள்ளார். மேலும், அந்தப் பெண்ணை புர்கா அணியவும், தொழுகை நடத்தவும் கட்டாயப்படுத்தி மன ரீதியாகப் பிரயத்தனம் செய்துள்ளார். ஒருகட்டத்தில் அங்கிருந்து தப்பித்து கடந்த மார்ச் 16ஆம் தேதி தனது வீட்டிற்கு வந்து சேர்ந்த அந்தப் பெண்ணை, ஷாஹித் அன்வர் மீண்டும் பின்தொடர்ந்து வந்துள்ளார்.
மார்ச் 17 அன்று மாலையில் பெண்ணின் வீட்டிற்குச் சென்ற ஷாஹித், பெண்ணின் தாயைத் தாக்கிவிட்டு அந்தப் பெண்ணை மீண்டும் கடத்த முயன்றுள்ளார். மேலும், தடுத்தால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து ராஜமஹால் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஷாஹித் அன்வரை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காவல்துறை அதிகாரிகள், இந்த ஜோடி ஏற்கனவே இரண்டு முறை வீட்டை விட்டு ஓடிப்போயுள்ளதாகவும், ஒருமுறை நீதிமன்றத்தில் அந்தப் பெண் இளைஞருடன் செல்ல விருப்பம் தெரிவித்திருந்ததாகவும் கூறினர். தற்போது எழுந்துள்ள மதமாற்றப் புகார் மற்றும் மிரட்டல் குறித்து போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications