இவருக்கு இப்படி ஒரு வீக்னெஸ் இருக்காம்.. மாமா பவன் கல்யாண் பற்றி மருமகன் உடைத்த ரகசியம்!
அமராவதி: ஆந்திர மாநில துணை முதல்வராகப் பதவியேற்றுள்ள பவன் கல்யாணுக்குத் தெலுங்கு நடிகர் ஒருவர் வீடியோ கேம் விளையாட்டுப் பொருட்களை வாங்கி பரிசளித்துள்ளார். அவர் யார்? இந்த விளையாட்டுப் பொருட்களைப் பவனுக்குப் பரிசளிக்க என்ன காரணம் என்ற சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகக் கடந்த வாரம் பதவியேற்றார் பவன் கல்யாண். அன்று முதல் அவரைப் பற்றிய பல சுவாரஸ்யமான செய்திகள் தினமும் புதுசு புதுசாக வெளிவந்து கொண்டே உள்ளது.

இன்றைய இளம் தெலுங்கு தலைமுறையினருக்கு மட்டுமல்ல; அவர் காலத்து ரசிகர்களுக்கே கூட இந்த சுவாரஸ்ய தகவல்கள் மலரும் நினைவுகளாக மாறியுள்ளது.
சொல்லப்போனால் கடந்த 1996 இல் வெளியான 'அக்கடா அம்மாயி இக்கட அப்பா' படம் மூலம் தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமானார் பவன் கல்யாண். இவருக்கு முன்பாகவே அவரது அண்ணன் சிரஞ்சீவி, தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா உலகில் பெரிய ஸ்டார் ஆக வலம் வந்தார்.
பவண் கல்யாண் அறிமுகம் என்னவோ 1996இல் நடந்திருக்கலாம். ஆனால், 1998 ஆம் ஆண்டு வெளியான 'தோலி பிரேமா' அவரது சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. இதுதான் அவரது முதல் வெற்றிப் படம்.
எனவேதான், இந்த வெற்றியை ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் தனது ஜனசேனா கட்சியை 21 இடங்களில் வெற்றி பெறவைத்தவுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார் பவன்.
ஆந்திர சினிமா உலகில் என்.டி.ராமராவ்தான் முதன்முதலாகத் தெலுங்கு சினிமா உலகிலிருந்து அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தவர். அவர் கட்சி தொடங்கிய உடன் ஆட்சி அதிகாரம் அவரைத் தேடி வந்தது. அதன்பிறகு சிரஞ்சீவி கூட முயற்சி செய்தார்.
ஆனால், ஆந்திர மக்கள் அவருக்கு சினிமாவில் கொடுத்த வெற்றியைப் போல அரசியல் வாழ்க்கைக்குக் கொடுக்கவில்லை. அந்த மனக்குறையை அவரது தம்பி பவன் இப்போது உடைத்து எறிந்துள்ளார். இன்று பவன் ஆந்திர சட்டசபையில் துணை முதல்வர். இந்த அதிரடியான அரசியல் மாற்றத்தை ஆந்திர அரசியல் களமே எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால், அதுதான் நடந்தது.
சந்திரபாபு நாயுடு கூட அவரது மாமனார் ஆரம்பித்த தெலுங்கு தேசம் கட்சியின் புகழ் வெளிச்சத்தின் மூலம் ஆட்சிக்கு வந்தார். ஜெகன்மோகன் ரெட்டியும் அவரது அப்பாவின் ஆட்சி அதிகாரத்தின் பின்புலத்திலிருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றார்.
ஆனால், பவன் கல்யாண் அவரே கட்சி தொடங்கி, அதை ஆட்சி அதிகாரத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.
நடந்து முடிந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் பவன் கட்சி வெற்றி பெற்றவுடன் அந்தச் செய்தி எந்தளவுக்குத் தலைப்புச் செய்தியானதோ அதே அளவுக்கு அவரைப் பற்றியும் அவரது மனைவியைப் பற்றியும் பல செய்திகள் வெளிவந்து கொண்டுதான் உள்ளன.
இப்போது பவன் கல்யாண் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. ஆந்திராவின் துணை முதல்வராகப் பதவி பெற்று உயர்ந்த பொறுப்பில் உட்கார்ந்திருக்கும் பவன் கேம் விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். சொல்லப்போனால் வீடியோ கேம் பைத்தியம் அவர் என்று அவரை அறிந்த சக நடிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.
அவர் யார் என்கிறீர்களா? அவரும் ஒரு நடிகர். அவரது பெயர் சாய் தரம் தேஜ். இவர்தான் பவன் கல்யாணுக்கு ஸ்டார் வார்ஸ் லெகோ செட் பரிசளித்தார். பவன் இவருக்கு மாமா முறையில் உறவினர். ஆகவே மாமா துணை முதல்வராகப் பதவியேற்ற உடனேயே, தேஜ் பவன் ஸ்டார் வார்ஸ் லெகோ செட்டைப் பரிசளித்தார். அதற்கான புகைப்படத்தையும் அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சாய் தரம் தேஜ் படங்களில் நடிக்க முடிவு செய்ததிலிருந்து பவன் கல்யாண் இவருக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். பல வழிகளில் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். இன்ஸ்டாவில் இந்தப் பெயரில் உள்ள இவர் திரையுலகில் பஞ்சா சாய் தரம் தேஜ் என்று அறியப்படுகிறார். இவரும் அல்லு-கொனிடேலா குடும்பத்தைச் சேர்ந்த நடிகர்.
கடந்த 2014இல் வெளியான பில்லா நுவ்வு லெனி ஜீவிதம் மூலம் நடிகராக அறிமுகமானார். இது பாக்ஸ் ஆபீஸ் ஹிட் திரைப்படம். இதற்காக இவருக்குச் சிறந்த அறிமுக நடிகருக்கான சைமா விருது கிடைத்தது.
இவர் குழந்தையாக இருந்த காலத்தில் மாமா பவனுடன் சேர்ந்து இருவரும் ஒன்றாக வீடியோ கேம்ஸ் விளையாட்டுகளில் ஈடுபாடுடன் விளையாடி உள்ளனர். அந்தக் காலத்தில் மட்டும் இல்லை. வளர்ந்த பிறகும் பவன் வீடியோ கேம் ஆடுவதில் அதிக ஆர்வம் கொண்டவராகவே இருந்துள்ளார். அரசியல் நெருக்கடிகளை மறக்க இந்த மாதிரியான சாகச விளையாட்டுகள் அவரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள உதவியுள்ளன.
மாமாவுக்கு கேம் பொருட்களை அன்புப் பரிசாக வழங்கிய சாய், "என் அன்புக்குரிய ஜெடி மாஸ்டர் மற்றும் ஆந்திர மாநில துணை முதல்வர் தான் எனக்கு ஸ்டார் வார்ஸ் மற்றும் லெகோ வீடியோ கேம் விளையாட்டுகளை அறிமுகப்படுத்தியவர்.
இறுதியாக இப்போது, எனது குழந்தைப் பருவ நினைவுகளை மீண்டும் நினைவுகூர வைத்துள்ளார். அவருக்குள்ளாக இருக்கும் ஒரு குழந்தைக்கு பரிசளிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது" என்று கூறியுள்ளார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications