மாஸ்டர் மைண்ட்.. காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையே இவர் தான்.. யார் இந்த சாய்புல்லா கசூரி?
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் நேற்று 4 பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக சுற்றுலா பயணிகள் மீது கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் பலியாகினர். லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான தி ரெசிஸ்டென்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரின் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் என்ற சுற்றுலா தலம் மிகவும் பிரசித்தி பெற்றது. இது ஒரு புல் மேடு பகுதியாகும். பஹல்காமில் பைசாரன் புல்வெளி என்பது ‛மினி ஸ்வீட்சர்லாந்து' என்று அழைக்கப்படுகிறது.

இங்கு நடந்து மட்டுமே செல்ல வேண்டும். வாகனங்களில் பயணிக்க முடியாது. இங்கு ஆண்டுதோறும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து செல்வார்கள். இங்கு நேற்று நுழைந்த 4 பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கியால் சுட்டு சுற்றுலா பயணிகளை கொன்றனர்.
இந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் மொத்தம் 26 பேர் பலியாகினர். தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 12 பேர் வரை காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நம் நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) என்ற அமைப்பின் துணை பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்புதான் பொறுப்பு ஏற்றுள்ளது.
இந்த தாக்குதலில் தொடர்புடைய 4 பயங்கரவாதிகளின் போட்டோக்கள் தற்போது வெளியாகி உள்ளன. அவர்களை பிடிக்கும் பணியில் ராணுவ வீரர்கள், போலீசார் ஈடுபட்டுள்ளனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரின் பெயர் சாய்புல்லா கசூரி என்ற காலித். இவர் லஷ்கர் -இ -தொய்பா அமைப்பின் முக்கிய கமாண்டராக இருக்கிறார். இவர் மட்டுமின்றி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் மேலும் 2 பேர் மூளையாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனை உளவுத்துறை உறுதி செய்துள்ளது.
இதில் சாய்புல்லா கசூரி, லஷ்கர் இ தொய்பா அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீத்துடன் மிகவும் நெருக்கம். இதனால் சாய்புல்லா கசூரி திட்டத்தின் கீழ் இந்த தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத செயலுக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளவர்கள் உதவி செய்துள்ளனர்.
மேலும் சாய்புல்லா கசூரியை எடுத்து கொண்டால் அவர் பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தவர். களத்தில் நம்பிக்கைகுரிய ஒரு கமாண்டராக சாய்புல்லா கசூரியை பயங்கரவாத அமைப்பினர் புகழ்ந்து வருகின்றனர். லஷ்கர் இ தொய்பா அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ளார். எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்கு மாஸ்டர்மைண்ட்டாக செயல்பட்டு வருகிறார். ஜம்மு காஷ்மீரின் முக்கிய பகுதிகளில் பயங்கரவாதிகளை நிலைநிறுத்துவது, எல்லை கட்டுப்பாட்டு கோடுகளை தாண்டிய ஊடுருவல் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டம் போட்டு கொடுக்கும் பணி மூலம் நம்நாட்டுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications