நடிச்சா ரஜினி கூடத்தான்...! - முன்னணி வீராங்கனை சாய்னா நெவால்
விளையாட்டுதான் எனக்கு முக்கியம் என்றாலும், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. ஆனால் அது ரஜினி படமாகத்தான் இருக்க வேண்டும் என்கிறார் பேட்மிண்டனில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாகத் திகழும் சாய்னா நெவால்.
பேட்மிண்டன் எனும் இறகுப் பந்து விளையாட்டில் உலகிலேயே முதல் நிலை வீராங்கனையாகத் திகழ்பவர் இந்தியாவின் சாய்னா நெவால்.

ஆரம்பத்திலிருந்தே இவர் தீவிர ரஜினி ரசிகை. எந்திரன் படம் வெளியானபோது, ரஜினியைச் சந்திக்க மிகவும் ஆர்வம் காட்டினார். பின்னர் திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளதாகவும், அதுவும் ரஜினியுடன்தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாகவும் கூறினார்.
இந்த நிலையில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக இப்போது மாறியுள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியின்போது, அவரது நடிப்பு ஆசை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறிய பதில்:
"என்னுடைய முதல் கவனம் என் விளையாட்டு போட்டிகளாக இருந்தாலும், ரஜினியுடன் ஒரு படத்தில் நடிக்க அனுமதி வாங்கி கொடுங்க. எந்த இடத்தில் கையெழுத்து கேட்டாலும் உடனே போடுகிறேன்.
அவருடன் நடிப்பதே பெருமையாகவும் பாக்கியமாகவும் கருதுகிறேன். இந்த வயதிலும் அவர் திரையில் அழகாக தோன்றுவது வியப்பாக உள்ளது."












Click it and Unblock the Notifications