65 வயது மவுனச்சாமியார் சுட்டுக்கொலை... மேற்குவங்காளத்தில் மர்மநபர்கள் அட்டூழியம்
பர்டுவான்: மேற்கு வங்காளத்தில் ஆசிரமத்தில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த மவுனச் சாமியாரை சரமாரியாகச் சுட்டதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாகப் பலியானார்.
மேற்குவங்காள மாநிலம் பர்டுவான் மாவட்டம் சன்ன கிராமத்தில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வருபவர் கர்ஜ்பசிந்து சாட்டோபாத்யா என்ற சாமியார். 65 வயதான இவர் மவுன சாமியார் என மக்களால் அழைக்கப் படுகிறார். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக கர்ஜ்பசிந்து சாமியார் இந்த ஆசிரமத்தில் தங்கி இறைபணியாற்றி வருவதாகச் சொல்லப் படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு ஆசிரமத்தில் உள்ள அவரது அறையில் புகுந்த மர்ம மனிதர்கள் மவுனசாமியாரை நோக்கி சரமாரியாகச் சுட்டுள்ளனர். இதில், குண்டடி பட்டு சம்பவ இடத்திலேயே சாமியார் உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சாமியாரை சுட்டுக்கொன்ற மர்ம ஆசாமிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து அவர்கள் விசாரித்து வருகின்றனர்.
சமீபகாலமாக, சாமியார்களைக் குரிவைத்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவது மேற்கு வங்காளத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட இதேபோல், இரண்டு சாமியார்கள் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications