‛ஜாக்பாட்’.. மேற்குவங்க எம்எல்ஏக்களின் சம்பளம் ரூ.40,000 உயர்வு! மொத்த ஊதியம் எவ்வளவு தெரியுமா? ஆஹா
கொல்கத்தா: மேற்குவங்க எம்எல்ஏக்களுக்கான மாதசம்பளத்தை திடீரென ரூ.40 ஆயிரம் வரை உயர்த்தி அம்மாநில முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதன்மூலம் சம்பளம், அலோவன்ஸ் என இனி மாதம் மேற்கு வங்க மாநில எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பெறும் முக்கிய விபரம் வெளியாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல் அமைச்சராக அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளார். இவர் கடந்த 2011 முதல் தொடர்ந்து 3வது முறையாக மேற்கு வங்க மாநில முதல்வராக செயல்பட்டு வருகிறார்.

தற்போது மேற்கு வங்காளத்தை ஆட்சி செய்யும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 220 எம்எல்ஏக்களும், கூட்டணி கட்சியான பிஜிபிஎம் கட்சிக்கு ஒரு எம்எல்ஏவும் உள்ளன. எதிர்க்கட்சியாக உள்ள பாஜகவுக்கு மொத்தம் 69 எம்எல்ஏக்கள் உள்ளன.
திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவை தவிர பிற கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஐஎஸ்எப் கட்சிக்கு தலா ஒரு எம்எல்ஏக்களும், 2 தொகுதி காலியாகவும் உள்ளன. தற்போது மேற்கு வங்காளத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் இன்று எம்எல்ஏக்களின் சம்பளத்தை உயர்த்தி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இருப்பினும் பிற அலோவன்ஸ் தொகைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில், ‛‛பிற மாநிலங்களை ஒப்பிடும்போது மேற்கு வங்க மாநிலத்தில் எம்எல்ஏக்களின் சம்பளம் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் எம்எல்ஏக்களுக்கான சம்பளம் என்பது ரூ.40 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்படுகிறது'' என அறிவித்துள்ளார். இதனால் எம்எல்ஏக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தமட்டில் கேபினட் அமைச்சர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு மாதசம்பளம், அலோவன்ஸ்கள் 3 வகைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி பார்த்தால் தற்போது கேபினட் அமைச்சர்கள் மாதசம்பளமாக ரூ.11,000 + பிற அலோவன்ஸ்கள் சேர்த்து ரூ.1.10 லட்சம் வரை பெற்று வருகின்றனர். அதேபோல் அமைச்சர்கள் மாதசம்பளமாக ரூ.10 ஆயிரத்து 900 + பிற அலோவன்ஸ்கள் சேர்த்து ரூ.1.10 லட்சம் வரை பெற்றனர். எம்எல்ஏக்கள் ரூ.10 ஆயிரம் சம்பளத்துடன் அலோவன்களுடன் சேர்த்து மாதம் ரூ.81 ஆயிரம் பெற்று வந்தனர்.
இத்தகைய சூழலில் தான் தற்போது எம்எல்ஏக்கள், அமைச்சர்களின் சம்பளம் என்பது ரூ.40 ஆயிரம் வரை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சம்பளம் + அலோவன்ஸ் என மாதம் ரூ.81 ஆயிரம் பெற்று வந்த எம்எல்ஏக்கள் இனி ரூ.1.21 லட்சம் வரை பெறுவார்கள். அதேபோல் அதேபோல் சம்பளம் + அலோவன்ஸ் என மாதம் ரூ.1.10 லட்சம் பெற்று வந்த அமைச்சர்கள் வரும் மாதங்களில் ரூ.1.50 லட்சம் வரை பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications