கணவர்தான் என்னுடைய ஹீரோ... மரணமடைந்த ராணுவ வீரர் மனைவியின் நெகிழ்ச்சிப் பதிவு!
என்னுடைய கணவர் தான் எப்போதுமே எனது ஹுரோ என்று உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவில் பதிவிட்ட செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி : 2001ம் ஆண்டு ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகளை எதிர்த்து நடந்த சண்டையில் உயிரிழந்த மேஜர் தான் எப்போதுமே தனது ஹீரோ என்று முனநூலில் அவரது மனைவி பதிவிட்ட கருத்து வைரலாகி வருகிறது.
ஜூலை 1ம் தேதி 2001ம் ஆண்டு ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தனது கணவர் மேஜர் ஷஃபீக் ஹோரியிடம் பேசும் போது சல்மா அடுத்த மூன்று நாட்களில் நிகழப் போகும் கொடூரம் பற்றி நினைக்கவில்லை. ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் ஷஃபீக் கோரி உயிரிழந்து விட்டதாக அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.
அந்த செய்தியைக் கேட்ட தருணம் எனக்கு பூமியே நின்றுவிட்டது போல இருந்தது. ஷஃபீக் உயிரிழந்த போது எனக்கு 29 வயது இருக்கும், திருமணமான பத்து ஆண்டுகளில் அவர் உயிரிழந்துள்ளார்.
நினைவுநாள் பதிவு
இந்நிலையில் ஷஃபீக்கின் 16-வது நினைவுநாளையொட்டி சல்மா முகநூலில் Being you என்று வெளியிட்ட பதிவு ஒன்றரை லட்சம் லைக்குகளை பெற்றதோடு, 42 ஆயிரம் ஷேர்களை பெற்றுள்ளது.

உள்ளத்தால் உடன் வாழ்கிறார்
ஷஃபீக்கிற்கு நாட்டின் மீது எவ்வளவு அன்பு என்று எனக்கு தெரியும், குழந்தைகள், மனைவியெல்லாம் இரண்டாம் பட்சம்தான். நான் என்னுடைய கணவரை உடலால் மட்டுமே பிரிந்து வாழ்கிறேன், ஆனால் மனதால் அவர் என்னுடன்தான் இருக்கிறார் என்று சல்மா கூறியுள்ளார். ஷஃபீக் இல்லாமல் கடந்த வாழ்க்கையின் கடின பக்கங்களையும் அதிலிருந்து தான் கற்ற பாடங்கள் என்ன என்பதையும் எடுத்து சொல்லியுள்ளார் அவர்.

கணவர் தான் ஹீரோ
எப்போதுமே என்னுடைய ஹீரோ என்னுடைய கணவர் தான் என்று சல்மா தனது கணவரின் ராணுவ உடை அருகே நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சல்மா. அவரது தன்னம்பிக்கைக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

உண்மையான தேசப்பக்தி
16 ஆண்டுகளுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் ஷஃபீக் உயிரிழந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் எல்லையில் அதிகரித்து வரும் ஊடுஐவல்கள் பற்றியும் தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பது குறித்தும் உள்தறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டில் நாம் நல்ல வாழ்க்கை வாழ எல்லையில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் படும் கஷ்டத்தை சொல்வது போல இருக்கும் சல்மாவின் பதிவு உண்மையான தேசப் பக்திக்கான எடுத்துக்காட்டு எனலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications