விரைவில் சல்மான் கான் உறவினர் ஆகப் போகும் கேகேஆர் கேப்டன் கம்பீர்
மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானும், கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீரும் விரைவில் உறவினர்களாக உள்ளனர்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் கௌதம் கம்பீர். கம்பீரும் நடிகர் சல்மான் கானும் விரைவில் உறவினர்களாக உள்ளனர். சல்மானின் தங்கை அர்பிதா கான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலர் ஆயுஷ் ஷர்மாவை திருமணம் செய்தார்.

ஆயுஷ் ஷர்மாவின் சகோதரர் ஆஷ்ரய் ஷர்மா விரைவில் தனது நீண்ட நாள் காதலியான ராதிகா கம்பீரை திருமணம் செய்ய உள்ளார். அவர்களின் திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஆயுஷ், அர்பிதா திருமணம் நடந்தபோது தான் ஆஷ்ரய், ராதிகாவின் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்று கூறப்படுகிறது.
கௌதம் கம்பீரின் உறவுக்கார பெண் தான் ராதிகா என்பது குறிப்பிடத்தக்கது. சல்மானும், ஷாருக்கும் சேர்ந்து ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் விரைவில் நடிக்க உள்ளார்களோ இல்லையோ நிச்சயம் ராதிகாவின் திருமணத்தில் சேர்ந்து நடனம் ஆடுவார்கள் என்று நம்பப்படுகிறது.
கௌதம் கம்பீருக்காகவாவது ஷாருக் அந்த திருமண விழாவில் நிச்சயம் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications